Roman script
Singer : Aalap Raju Music by : Aalap Raju Male Part Naam nadandha theruvil Naan mattum Nizhal vizhundha theruvil Irul mattum Male Part Kavidhai paadiya kuyilgal Irandhu ponadhadi Kaalam ennum nadhiyoo Vadindhu ponadhadi Kanneer eritha saambal mattum Kaatril alaiyudhadi Male Part Naam nadandha theruvil Naan mattum Nizhal vizhundha theruvil Irul mattum Male Part Indha theruvil kaagam karaindhal Isai thaan Indha theruvil puzhudhi parandhal Manam thaan Indha theruvil vaeppam kaniyum thaen thaan Ithanai maayam nigazhndha kaaranam neethaan Male Part Kaadhal nadandha veedhiyilae Nadandhu paarthal kodumaiyae Dhegam thedi aadai ondru Nadandhu podhal naragamae Male Part Oru sollum pesamalae Oomai kaadhal mudindhadhadi Naam idhayangalin uraiyaadalai thaan Indha theruvae pesudhadi Male Part Naam nadandha theruvil Naan mattum Nizhal vizhundha theruvil…… Male Part Saayam pona pookkal pookkum Marangal Naam kannam pola kaarai peyarndha Suvargal Thinnai ellaam odi pona kudilgal Unnai ennai thedi paarkum thadangal Male Part Veedhiyirundhum verumaiyaai Naadhiyirundhum thanimaiyaai Ilakkanathil mattum alla Vaazhkkaiyilum orumaiaai Male Part Oru sollum pesamalae Oomai kaadhal mudindhadhadi Naam idhayangalin uraiyaadalai thaan Indha theruvae pesudhadi Male Part Naam nadandha theruvil Naan mattum Nizhal vizhundha theruvil Irul mattum Male Part Kavidhai paadiya kuyilgal Irandhu ponadhadi Kaalam ennum nadhiya Vadindhu ponadhadi Kanneer eritha saambal mattum Kaatril alaiyudhadi Male Part Naam nadandha theruvil Naan mattum Nizhal vizhundha theruvil…mmm..mm..
தமிழ்
பாடகர் : ஆலப் ராஜு இசை அமைப்பாளர் : ஆலப் ராஜு ஆண் : நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும் ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி ஆண் : நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும் ஆண் : இந்தத் தெருவில் காகம் கரைந்தால் இசைதான் இந்தத் தெருவில் புழுதி பறந்தால் மணம்தான் இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான் இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான் ஆண் : காதல் நடந்த வீதியிலே நடந்து பார்த்தல் கொடுமையே தேகம் தேடி ஆடை ஒன்று நடந்து போதல் நரகமே ஆண் : ஒருசொல்லும் பேசாமலே ஊமைக் காதல் முடிந்ததடி நம் இதயங்களின் உரையாடலைத்தான் இந்தத் தெருவே பேசுதடி ஆண் : நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில்.... ஆண் : சாயம்போன பூக்கள் பூக்கும் மரங்கள் நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த சுவர்கள் திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள் உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள் ஆண் : வீதியிருந்தும் வெறுமையாய் நாதியிருந்தும் தனிமையாய் இலக்கணத்தில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் ஒருமையாய் ஆண் : ஒருசொல்லும் பேசாமலே ஊமைக் காதல் முடிந்ததடி நம் இதயங்களின் உரையாடலைத்தான் இந்தத் தெருவே பேசுதடி ஆண் : நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும் ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி ஆண் : நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் ம்ம்ம் ம்ம் ம்ம் .........
Song information
Singer: Aalap Raju
Music by: Aalap Raju
Release information: From Naatpadu Theral (2021) · Singer: Aalap Raju · Lyricist: Vairamuthu · Music: Aalap Raju
Explore this song
- Singer: Aalap Raju
- Film / album: Naatpadu Theral
- Composer: Aalap Raju