Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Female Part Haa…aaa…aaa…haa…. Haa…aaa…aaa…haa…. Haa…aaa…aaa…haa…. Haa…aaa…aaa…haa…. Male Part Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Udalal thegathaal irandaana pothilum Uyiraal unarvinaal athu ondruthaanae Neeyo naano iru jeevan ondrae Male Part Mugilo megamo sol veru veru Irandum irando.. Male Part Idhayathin araigalil pudhiya vaasam Manam enum vanangalil Malarntha poovin nesam Ninaivenum alaigalil valaiyai veesum Viralgalai idhayamae Virumbiyae serum Male Part Kaadhalin settaigal Kaaranam neeyadi Paarvaiyin vettaigal Thaithathae villadi Inimaigal ethu ethu Athu namakku naduvilae Female Part Lalaaa..laa…thararaa rararaa…. Male Part Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Male Part Kadarkarai manalilae nadanthu ponen Suvadugal anaithilum Unnai naan paarthen Kalangarai vilakamum vizhiyil paarthen Alai yethu karai yethu Kulambiyae ponen Male Part Siragugal virikiren Paravaiyae paravaiyae Thavalgiren kuthikiren Mazhalaiyae mazhalaiyae Arugilum tholaivilum Nerukam neeyae thaan Male Part Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Udalal thegathaal irandaana pothilum Uyiraal unarvinaal athu ondruthaanae Neeyo naano iru jeevan ondrae Male Part Mugilo megamo sol veru veru Irandum irando..
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா..ஆஆ...ஆஆ...ஹா....(4) ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே உடலால் தேகத்தால் இரண்டான போதிலும் உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ.... ஆண் : இதயத்தின் அறைகளில் புதிய வாசம் மனம் எனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம் நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும் விரல்களை இதயமே விரும்பியே சேரும் ஆண் : காதலின் சேட்டைகள் காரணம் நீயடி பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே பெண் : லாலா லா தா ராரார ராரார ஆண் : கடற்கரை மணலிலே நடந்து போனேன் சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன் கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன் அலை எது கரை எது குளம்பியே போனேன் ஆண் : சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான் ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே உடலால் தேகத்தால் இரண்டான போதிலும் உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ....
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Megha (2016) · Lyricist: Na. Muthu Kumar