Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Moothaval nee koduthaai vaazhvilae munnaetram Munnaerum vazhiyil indru ilaiyaval arangaettram Thamizhae…. Female Part Moothaval nee koduthaai vaazhvilae munnaetram Munnaerum vazhiyil indru ilaiyaval arangaettram Megathaal mazhai pozhiyum megathukku laabamenna Megathaal mazhai pozhiyum megathukku laabamenna Thiyagathaal emai valartha deivam kanda laabamenna Female Part Moothaval nee…. Female Part Thannaiyae theithu tharum sandhanam undhan ullam Mannilae oruvar illai mangai unakkeedu solla Thannaiyae theithu tharum sandhanam undhan ullam Mannilae oruvar illai mangai unakkeedu solla Ennavoo nee kidaithaai ellorkkum vaazhvu thara Female Part Moothaval nee………….. Female Part Aanaaga piranthirunthaal raajangam unadhu kaiyil Aanaaga piranthirunthaal raajangam unadhu kaiyil Pennaaga pirandhu vittaai naangal thaan un madiyil Than maanam kaappaval nee sanmaanam yaar tharuvaar Female Part Moothaval nee koduthaai vaazhvilae …. arangaettram Female Part Moothaval nee…… Female Part Kalyaana sugamumillai kadamaikku mudivum illai Ethanai iravu kandaai enna nee uravu kandaai Kalyaana sugamumillai kadamaikku mudivum illai Ethanai iravu kandaai enna nee uravu kandaai Kann moodum velaiyilum emmai thaaan kanavu kandaai Female Part Moothaval nee koduthaai vaazhvilae munnaetram Munnaerum vazhiyil indru ilaiyaval arangaettram Ilaiyaval arangaettram
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் தமிழே............. பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன பெண் : மூத்தவள் நீ பெண் : தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம் மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம் மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல என்னவோ நீ கிடைத்தாய் எல்லோர்க்கும் வாழ்வு தர பெண் : மூத்தவள் நீ ... பெண் : ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில் ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில் பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான் உன் மடியில் தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார் பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே .... அரங்கேற்றம் பெண் : மூத்தவள் நீ..... பெண் : கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய் கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய் கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய் பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் இளையவள் அரங்கேற்றம்
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Arangetram (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Arangetram
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan