Roman script
Singer : Anthony Daasan Music by : Anthony Daasan Male Part {Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum …} (2) Male Part {Maasam oruvaatti Naan vadugapatti pogaatti Valadhu kai neetti Naan malaiyoda pesaatti …} (2) Male Part Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum … Male Part Vaigai nadhimela en Valadhu kai nanaikkaama Vaigaiyila velayaadum Vaalameenu thoongaadhu Male Part Poomarathu keezhae naan Pudhuppaattu ezhuthaama Poomarathil koodukattum Puraa irai kollaadhu Male Part Kathaalangaadu Engaalsoodu kaangaama Kathaalam pudharoda Kaadai muttai podaadhu Male Part Manjalaaru anaiyil naan Malaikaathu vaangaama Manjalaathu moolaiyilae Manikurivi meyaadhu Male Part {Malaiyai konjam kadichukittae Koozh kudicha boomiyadaa Mannum malaiyum enga Paramabaraikkae saamiyadaa} (2) Male Part Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum … Male Part Kumabakarai saalaiyilae Komiya vaasam pudikkama Mandaikkulla mallukatti Malliapoo pookkaadhu Male Part Kedaiyaattu mandhaiyila Kedaa koothu kaangaama Kaanjupona pozhappukulla Karpanaiyae kelambaadhu Male Part Saathisanam pesum Mozhi sangeetham kelaama Idhigaasa ezhuthukku Sagavaasam irukkaadhu Male Part Suttameen kavuchi Vandhu surrunnu yeraama Enseer viruthathil Ezhaancheeru vaaraadhu Male Part {Malaiyai konjam kadichukittae Koozh kudicha boomiyadaa Mannum malaiyum enga Paramabaraikkae saamiyadaa} (2) Male Part Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum … Male Part Maasam oruvaatti Naan vadugapatti pogaatti Valadhu kai neetti Naan malaiyoda pesaatti … Male Part Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum …
தமிழ்
ஆண் : {மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ..} (2) ஆண் : {மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி...} (2) ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ஆண் : வைகை நதிமேல என் வலதுகை நனைக்காம வைகையில வெளையாடும் வாளமீனு தூங்காது ஆண் : பூமரத்துக் கீழே நான் புதுப்பாட்டு எழுதாம பூமரத்தில் கூடுகட்டும் புறா இரை கொள்ளாது ஆண் : கத்தாழங் காடு எங்கால்சூடு காங்காமக் கத்தாழம் புதரோட காடைமுட்டை போடாது ஆண் : மஞ்சளாறு அணையில் நான் மலைக்காத்து வாங்காம மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது ஆண் : {மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா} (2) ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ஆண் : கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம மண்டக்குள்ள மல்லுக்கட்டி மல்லியப்பூ பூக்காது ஆண் : கெடையாட்டு மந்தையில கெடாக் கூத்துக் காங்காம காஞ்சுபோன பொழப்புக்குள்ள கற்பனையே கெளம்பாது ஆண் : சாதிசனம் பேசும் மொழி சங்கீதம் கேளாம இதிகாச எழுத்துக்கு சகவாசம் இருக்காது ஆண் : சுட்ட மீன் கவுச்சி வந்து சுர்ருன்னு ஏறாம எண்சீர் விருத்தத்தில் ஏழாஞ்சீரு வாராது ஆண் : {மலையைக் கொஞ்சம் கடிச்சுக்கிட்டே கூழ்குடிச்ச பூமியடா மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா} (2) ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ஆண் : மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
Song details
Music by: Anthony Daasan
Release information: From Naatpadu Theral (2021) · Singer: Anthony Daasan · Lyricist: Vairamuthu · Music: Anthony Daasan
- Singer: Anthony Daasan
- Film / album: Naatpadu Theral
- Composer: Anthony Daasan
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன்