Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan- Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Meettaadha veenai idhu veesi varum thendral Vaadadha mullai idhu paadi varum thaeni Meettaadha veenai idhu veesi varum thendral Vaadadha mullai idhu paadi varum thaeni Thevittadha inimai idhu thigattadha pudhumai Palingaana padhumai idhu pazhagaadha ilamai Thevittadha inimai idhu thigattadha pudhumai Palingaana padhumai idhu pazhagaadha ilamai Female Part Meettaadha veenai idhu veesi varum thendral Vaadadha mullai idhu paadi varum thaeni Female Part Aasiyudan odi varum azhagu mugam ondru Anjiyae nadungi varum anbu mugam ondru Paasamalar kondu varum paruva mugam ondru Paarthavudan naanamena sivandha mugam ondru Female Part Meettaadha veenai idhu veesi varum thendral Vaadadha mullai idhu paadi varum thaeni Female Part Mai vadiyum kann paarthu malar endru solvaar Mayangi varum nadai paarthu annanadai enbaar Kai yazhagu paarthavudan kavidhai mazhai pozhivaar Kaalamagal pettradhoru kolamayil enbaar Female Part Meettaadha veenai idhu veesi varum thendral Vaadadha mullai idhu paadi varum thaeni Hmm mm mm hmm mm ….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல் வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல் வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ பெண் : தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை பளிங்கான பதுமை இது பழகாத இளமை தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை பளிங்கான பதுமை இது பழகாத இளமை பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல் வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ பெண் : ஆசையுடன் ஓடிவரும் அழகு முகம் ஒன்று அஞ்சியே நடுங்கி வரும் அன்பு முகம் ஒன்று பாசமலர் கொண்டு வரும் பருவமுகம் ஒன்று பார்த்தவுடன் நாணமெனச் சிவந்த முகம் ஒன்று பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல் வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ பெண் : மை வடியும் கண் பார்த்து மலரென்று சொல்வார் மயங்கி வரும் நடை பார்த்து அன்னநடை என்பார் கையழகு பார்த்தவுடன் கவிதை மழை பொழிவார் காலமகள் பெற்றதொரு கோலமயில் என்பார் பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல் வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ....
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan- Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Thendral Veesum (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thendral Veesum
- Composer: Vishwanathan- Ramamoorthy
- Lyricist: Kannadasan