Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Maragathamani Male Part Mazhaiyum neeyae veyilum neeyae Nilavum neeyae neruppum neeyae Adadaa unaithaan Ingu vaazhum maanidar kaadhal enbadhaa Male Part Mazhaiyum neeyae veyilum neeyae Nilavum neeyae neruppum neeyae Adadaa unaithaan Ingu vaazhum maanidar kaadhal enbadhaa Male Part Mazhaiyum neeyae… Male Part Idhu enna mannil kooda Nilavum varumaa Sarasam payilum vizhiyil varumae Idhu enna thendral kooda Analaai chudumaa Thanimai ninaivil analaai chuduthae Male Part Paarkkaamal mella paarththaalae Adhudhaanaa kaadhal kalai Tholodu alli cherthaanae Adhudhaanaa mona nilai Idhu dhaan sorgamaa Idhu kaamadhavaenin yaaga saalaiyaa Male Part Mazhaiyum neeyae veyilum neeyae Nilavum neeyae neruppum neeyae Adadaa unaithaan Ingu vaazhum maanidar kaadhal enbadhaa Male Part Kalaiyellaam kattru kollum Paruvam paruvam Kadal neer alaipol idhayam alaiyum Karu neela kangal rendum Pavazham pavazham Eriyum viragam adhilae theriyum Male Part Yegaandham indha aanandham Adhan ellai yaararivaar Yedhedho sugam podhaadho Indha yekkam yaararivaar Mudhalaai mudivaai Ingu endrum vaazhvadhu Kaadhal ondru dhaan Male Part Mazhaiyum neeyae veyilum neeyae Nilavum neeyae neruppum neeyae Adadaa unaithaan Ingu vaazhum maanidar kaadhal enbadhaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மரகதமணி ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா ஆண் : மழையும் நீயே........ ஆண் : இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா சரசம் பயிலும் விழியில் வருமே இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை அடடா இதுதான் சொர்க்கமா இது காமதேவனின் யாகசாலையா ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம் கடல் நீர் அலைபோல் இதயம் அலையும் கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம் எரியும் விரகம் அதிலே தெரியும் ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார் ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார் முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான் ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Maragathamani
Release information: From Azhagan (1991) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Azhagan
- Composer: Maragathamani