Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Hamsalekha

Male Part

Devanin koyilil yettriya deepam

Theruvinil kidakkudhu idhu enna gnyaayam

Chorus

Aa aa aa aa ….aa aa aa aaa…aa aa aa aa…….

Male Part

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Veerargal saavilum peruvadhu vaazhvu

Kozhaigal vaazhvinil thinam thinam saavu

Male Part

Thunidhavan vizhigalil therigindra veeram

Thudithelum naalil saritharam maarum

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male Part

Puyalae puyalae innum kanneer sindhaadhae

Chorus : Kanneer sindhaadhae

Male : Iniyum azhudhaal engal nenjam thaangaathae

Chorus : Nenjam thaangaathae

Male : Uyarum kaigal ellaam ondraai serattum

Chorus : Ondraai serattum

Male : Adimai illai ennum raagam padattum

Chorus : Raagam padattum

Male Part

Needhiyin kangal irandaiyum thiruppu

Neerukkul urangum neruppaiyum ezhuppu

Manidhaa innum yen indha kelvi

Thoovum mazhaiyilum yeriyudhu velvi

Male Part

Thalaigal urulum pozhuthu dharmam thaangadhu

Chorus : Dharmam thaangadhu

Male : Thadaigal udaiyum varaiyil unmai thoongaathu

Chorus : Unmai thoongaathu

Male : Vidhiyum sadhiyum engal unarvai kolladhu

Chorus : Unarvai kolladhu

Male : Vidiyum varaiyil engal payanam nilladhu

Chorus : Payanam nilladhu

Male Part

Kaalanin veetukku kadithangal ezhudhu

Kayavargal vaazhvadhu needhikku pazhudhu

All : Veerargal saavilum peruvadhu vaazhvu

Kozhaigal vaazhvinil dhinam dhinam saavu

All : Thunidhavan vizhigalil therigindra veeram

Thudithelum naalil saritharam maarum

Thudithelum naalil saritharam maarum

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : தேவனின் கோயிலில் ஏற்றிய தீபம்

தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்

குழு : ஆஆஆஆ.....ஆஆஆஆ......ஆஆஆஆ...

ஆண் : மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு

கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

ஆண் : துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண் : புயலே புயலே இன்னும் கண்ணீர் சிந்தாதே

குழு : கண்ணீர் சிந்தாதே

ஆண் : இனியும் அழுதால் எங்கள் நெஞ்சம் தாங்காதே

குழு : நெஞ்சம் தாங்காதே

ஆண் : உயரும் கைகள் எல்லாம் ஒன்றாய் சேரட்டும்

குழு : ஒன்றாய் சேரட்டும்

ஆண் : அடிமை இல்லை என்னும் ராகம் பாடட்டும்

குழு : ராகம் பாடட்டும்

ஆண் : நீதியின் கண்கள் இரண்டையும் திருப்பு

நீருக்குள் உறங்கும் நெருப்பையும் எழுப்பு

மனிதா இன்னும் ஏனிந்த கேள்வி

தூவும் மழையிலும் எரியுது வேள்வி

ஆண் : தலைகள் உருளும் பொழுது தர்மம் தாங்காது

குழு :தர்மம் தாங்காது

ஆண் : தடைகள் உடையும் வரையில் உண்மை தூங்காது

குழு : உண்மை தூங்காது

ஆண் : விதியும் சதியும் எங்கள் உணர்வை கொல்லாது

குழு : உணர்வை கொல்லாது

ஆண் : விடியும் வரையில் எங்கள் பயணம் நில்லாது

குழு : பயணம் நில்லாது

ஆண் : காலனின் வீட்டுக்கு கடிதங்கள் எழுது

கயவர்கள் வாழ்வது நீதிக்கு பழுது

அனைவரும் : வீரர்கள் சாவிலும் பெறுவது வாழ்வு

கோழைகள் வாழ்வினில் தினம் தினம் சாவு

அனைவரும் : துணிந்தவன் விழிகளில் தெரிகின்ற வீரம்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்

துடித்தெழும் நாளில் சரித்திரம் மாறும்....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Hamsalekha

Release information: From Pudhiya Vaanam (1988) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Muthulingam · Music: Hamsalekha

Explore this song