Roman script
Singers : L. R. Eswari and P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female Part Vaanagamae vaiyagamae Valarnthu varum thaai inamae…ae… Aan ulaga medaiyilae Aasai nadai podaathae Aasai nadai podaathae Female Part Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Nilavukku vaanam pagaiyaanaal Adhu nadandhida verae vazhi yedhu Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Female Part Paravaikku siragu pagaiyaanaal Adhu padhungi vaazhndhida kaalgalundu Uravukku nenjae pagaiyanaal Mannil uyir inam perugida vagaiyedhu Nilavukku vaanam pagaiyaanal Adhu nadandhida verae vazhi yedhu Female Part Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Female Part Padagukku thudupu pagaiyaanaal Angu paai marathaalae udhaviyundu Kadalukku neeru pagaiyaanaal Angu kadhai sollum alaigalukku idamaedhu Female Part Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Female Part Kannukku paarvai pagaiyaanaal Adhai karuthaal unarndhida vazhiyundu Female Part Pennuku thunaivan pagaiyaanaal Andha paedhaiyin vaazhvil oliyedhu Both : Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Nilavukku vaanam pagaiyaanal Adhu nadandhida verae vazhi yedhu Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே .. ஆசை நடை போடாதே பெண் : மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு பெண் : பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது பெண் : மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு பெண் : படகுக்குத் துடுப்பு பகையானால் அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு கடலுக்கு நீரே பகையானால் அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது பெண் : மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு பெண் : கண்ணுக்குப் பார்வை பகையானால் அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு பெண் : பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது பெண்கள் : மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
Song information
Singers: L. R. Eswari and P. Susheela
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: L. R. Eswari and P. Susheela
- Film / album: Enga Veettu Pillai
- Composer: Vishwanathan – Ramamoorthy