Roman script
Singer : P. Susheela Music by : A. M. Raja Lyrics by : Kannadasan Female Part Malarukku neethaan nerottam Intha malarukku neethaan nerottam Intha nilaththukku neethaan nizhal megam Udalukku neethaan uyirottam Nammai irendena ninaippathum thavaraagum Female Part Malarukku neethaan nerottam….. Female Part Poovidhazh oram theanai eduththu Nee varum neram naan koduppen Poovidhazh oram theanai eduththu Nee varum neram naan koduppen Female Part Mai vizhi irandum nei vilakku Enthan mannavan vaazhum koyilukku Kaikal irandum poomaalai Enthan nayagan konda tholgalukku Female Part Malarukku neethaan nerottam….. Female Part Vaanmugil kadalin neerai eduththu Thaen mazhai endreathaan kodukkum Unnidam enaiyae naan koduppaen Antha neraththil naanae neeyaavaen Unnidam enaiyae naan koduppaen Antha neraththil naanae neeyaavaen Female Part Malarukku neethaan nerottam Intha malarukku neethaan nerottam Intha nilaththukku neethaan nizhal megam Udalukku neethaan uyirottam Female Part Malarukku neethaan nerottam…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம் இந்த மலருக்கு நீதான் நீரோட்டம் இந்த நிலத்துக்கு நீதான் நிழல் மேகம் உடலுக்கு நீதான் உயிரோட்டம் நம்மை இரண்டென நினைப்பதும் தவறாகும் பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்...... பெண் : பூவிதழ் ஓரம் தேனை எடுத்து நீ வரும் நேரம் நான் கொடுப்பேன் பூவிதழ் ஓரம் தேனை எடுத்து நீ வரும் நேரம் நான் கொடுப்பேன் பெண் : மை விழி இரண்டும் நெய் விளக்கு எந்தன் மன்னவன் வாழும் கோயிலுக்கு கைகள் இரண்டும் பூமாலை எந்தன் நாயகன் கொண்ட தோள்களுக்கு பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்...... பெண் : வான் முகில் கடலின் நீரை எடுத்து தேன் மழை என்றேதான் கொடுக்கும் உன்னிடம் எனையே நான் கொடுப்பேன் அந்த நேரத்தில் நானே நீயாவேன் உன்னிடம் உனையே நான் எடுப்பேன் அந்த நேரத்தில் நானே தாயாவேன்...... பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம் இந்த மலருக்கு நீதான் நீரோட்டம் இந்த நிலத்துக்கு நீதான் நிழல் மேகம் உடலுக்கு நீதான் உயிரோட்டம் பெண் : மலருக்கு நீதான் நீரோட்டம்......
Song information
Singer: P. Susheela
Music by: A. M. Raja
Lyrics by: Kannadasan
Release information: From Enakkoru Magan Pirappan (1975) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: A. M. Raja
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Enakkoru Magan Pirappan
- Composer: A. M. Raja
- Lyricist: Kannadasan