Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Malarae nalamaa Madimel vizhavaa Female Part Viriyum idhazhvasam Vazhiyum madhurasam Male Part Arasa ilaiyil urasum nilaiyil Sarasam yethanaiyo Female Part Idhazh amudha surabi Vazhiya vazhiya Vazhangum muththiraiyo Male Part Malarae nalamaa..malarae Male Part Thenpaandi muthukkal muppadhu Sippiyil vaippadhu idhazh Female Part Ammaadi ethanai muthirai Nithamum vaippadhu adhil Male Part Kodi koduthida venumadi Female Part Aadi ilaiththathu vanjikkodi Male Part Aadai iravinilae Female Part Kalaindhadhu aasai idaiyinilae Male Part Alaindhadhu bothai manathinilae Female Part Ezhundhadhu poovai vizhi adhilae Male Part Sivandhadhu Female Part Sivandha kannil kaadhal Deepa oliyilae kalaivizhaa Male Part Malarae nalamaa..malarae Female Part Venmegam panthalai ittadhu Muthukkal kottuthu adho Male Part Pendhegam panjanai ittadhu Nenjinai thottadhu idho Female Part Sindhum mazhaiyinil nee kulikka Male Part Selai kudaiyinai nee pidikka Female Part Sorgha kadhavugalo Male Part Thirandhana jothi karuvizhigal Female Part Sivandhana kaadhal kanavugalo Male Part Paliththana kanna kanichchulaigal Female Part Iniththana Male Part Nayana baashai pesi pesi Ilamaigal inaindhana Female Part Malarae nalamaa Madimel vizhavaa Male Part Viriyum idhazhvasam Vazhiyum madhurasam Female Part Arasa ilaiyil urasum nilaiyil Sarasam yethanaiyo Male Part Idhazh amudha surabi Vazhiya vazhiya Vazhangum muththiraiyo Female Part Malarae nalamaa..malarae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மலரே நலமா மடிமேல் விழவா பெண் : விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம் ஆண் : அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ பெண் : இதழ் அமுத சுரபி வழிய வழிய வழங்கும் முத்திரையோ ஆண் : மலரே நலமா...... மலரே..... ஆண் : தென்பாண்டி முத்துக்கள் முப்பது சிப்பியில் வைப்பது இதழ் பெண் : அம்மாடி எத்தனை முத்திரை நித்தமும் வைப்பது அதில் ஆண் : கோடி கொடுத்திட வேணுமடி பெண் : ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி ஆண் : ஆடை இரவினிலே பெண் : கலைந்தது ஆசை இடையினிலே ஆண் : அலைந்தது போதை மனதினிலே பெண் : எழுந்தது பூவை விழி அதிலே ஆண் : சிவந்தது பெண் : சிவந்த கண்ணில் காதல் தீப ஒளியிலே கலைவிழா ஆண் : மலரே நலமா... மலரே... பெண் : வெண்மேகம் பந்தலை இட்டது முத்துக்கள் கொட்டுது அதோ ஆண் : பெண்தேகம் பஞ்சணை இட்டது நெஞ்சினை தொட்டது இதோ பெண் : சிந்தும் மழையினில் நீ குளிக்க ஆண் : சேலை குடையினை நீ பிடிக்க பெண் : சொர்க கதவுகளோ ஆண் : திறந்தன சோதி கருவிழிகள் பெண் : சிவந்தன காதல் கனவுகளோ ஆண் : பலித்தன கன்னக் கனிச்சுளைகள் பெண் : இனித்தன ஆண் : நயன பாஷை பேசி பேசி இளமைகள் இணைந்தன பெண் : மலரே நலமா மடிமேல் விழவா ஆண் : விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம் பெண் : அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ ஆண் : இதழ் அமுத சுரபி வழிய வழிய வழங்கும் முத்திரையோ பெண் : மலரே நலமா..... மலரே.....
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Urimai (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Urimai
- Composer: Ilayaraja