Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : Viswanathan-Ramamoorthy Female Part Mahaaraajan ulagai aalalaam Indha mahaaraani avanai aaluvaa…aa…aal… Mahaaraajan ulagai aalalaam Female Part Pulavar paada arasar kooda Arinjar naada vaazhalaam Pudhumai koorum manaivi kannil Ulaga inbam kaanalaam Male Part Mahaaraani avanai aaluvaal Adhil mahaaraajan mayangiyaaduva..aa…aan… Mahaaraani avanai aaluvaal Male Part Pulavar paada arasar kooda Arinjar naada vaazhuvaan Pudhumai koorum manaivi kannil Ulaga inbam kaanuvaan Ulaga inbam kaanuvaan Mahaaraani avanai aaluvaal Female Part Naangu pakkam thiraigalaadum Paamalar manjam Adhan naduvinilae kudai pidikkum Kaadhalar nenjam Male Part Maan kodutha saayalangae Mayangidum konjam Andha mayakkathilae Thalaviyidam thalaivanae thanjam Female Part Paadhathil mugamirukkum Male : Paarvai irangi varum Female : Vegathil layithirukkum Male : Veeramum kalaithirukkum Both : Aa… aa… aa… aa…aa…aa…aa…aa….aa…. Female Part Magaaraajan ulagai aalalaam Male Part Kannanaiyum andha idam Kalakkavillaiyaa Indha karnanukku mattum enna Idhamillaiyaa Female Part Vallalukku vallal indha Penmai illaiyaa Endha mannavarkkum vazhanguvadhu Manaiviyillaiyaa Male Part Alli alli koduthirukkum Female : Andhi pagal thunaiyirukkum Male : Unna unna valarndhirukkum Female : Ulagamae marandhirukkum Both : Aa… aa… aa… aa…aa…aa…aa…aa….aa…. Female Part Magaaraajan ulagai aalalaam
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : மகாராஜன் உலகை ஆளலாம் இந்த மகாராணி அவனை ஆளுவாள்...ஆ...ஆ... மகாராஜன் உலகை ஆளலாம் பெண் : புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம் புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணலாம் ஆண் : மகாராணி அவனை ஆளுவாள் அதில் மகாராஜன் மயங்கியாடுவான்...ஆ...ஆ... மகாராணி அவனை ஆளுவாள் ஆண் : புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழுவார் புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணுவார் உலக இன்பம் காணுவார் மகாராணி அவனை ஆளுவாள் பெண் : நான்கு பக்கம் திரைகளாடும் பாமலர் மஞ்சம் அதன் நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம் ஆண் : மான் கொடுத்த சாயலங்கே மயங்கிடும் கொஞ்சம் அந்த மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம் பெண் : பாதத்தில் முகமிருக்கும் ஆண் : பார்வை இறங்கி வரும் பெண் : மேகத்தில் லயித்திருக்கும் ஆண் : வீரமும் களைத்திருக்கும் இருவர் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ..... ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : மகாராஜன் உலகை ஆளலாம் ஆண் : கண்ணனையும் அந்த இடம் கலக்கவில்லையா இந்த கர்ணனுக்கு மட்டும் என்ன இதயமில்லையா பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த பெண்மை இல்லையா எந்த மன்னவர்க்கும் வழங்குவது மனைவியில்லையா ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் பெண் : அந்தி பகல் துணையிருக்கும் ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும் பெண் : உலகமே மறந்திருக்கும் இருவர் : ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ..... ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : மகாராஜன் உலகை ஆளலாம்
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Karnan
- Composer: Viswanathan-Ramamoorthy