Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Maariyadhu nenjam maatriyadhu yaaro Kaarikaiyin ullam kaana varuvaaro Maariyadhyu nenjam maatriyavar yaaro Kaarikaiyin ullam kaana varuvaaro Maariyadhyu nenjam maatriyavar yaaro Female Part Naetru paartha mugam Naetru paartha vizhi Naetru kaettu mozhiyaavum Kaatrilaadi varum aattru vellamena Maatri maatri alai modhum Female Part Naetru paartha mugam Naetru paartha vizhi Naetru kaettu mozhiyaavum Kaatrilaadi varum aattru vellamena Maatri maatri alai modhum Ammamma amma Innum paarthaal iniyum kaettaal Enna sugamo Female Part Maariyadhyu nenjam maatriyavar yaaro Kaarikaiyin ullam kaana varuvaaro Maariyadhyu nenjam maatriyavar yaaro Female Part Aadai thandhu thamizhvaadai thandhu Manamedai vandhavanai kandu Aasai mundhi vara naanam pindhi vara Paesi paarkkum ninaivundu Female Part Aadai thandhu thamizhvaadai thandhu Manamedai vandhavanai kandu Aasai mundhi vara naanam pindhi vara Paesi paarkkum ninaivundu Ammamma amma Indha naeram andha nenjil enna ninaivo Female Part Maariyadhyu nenjam maatriyavar yaaro Kaarikaiyin ullam kaana varuvaaro Maariyadhyu nenjam maatriyavar yaaro Female Part Kaaviyathai mana oviyathil avan Thoovi vaitha vidhamenna Kannil paartha padam nenjil nirkkum vidham Kadavul thandha kalai enna Female Part Kaaviyathai mana oviyathil avan Thoovi vaitha vidhamenna Kannil paartha padam nenjil nirkkum vidham Kadavul thandha kalai enna Ammamma amma Vanna kalaiyai kanni adaiya enna vilaiyoo Female Part Maariyadhyu nenjam maatriyavar yaaro Kaarikaiyin ullam kaana varuvaaro Maariyadhyu nenjam maatriyavar yaaro
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ காரிகையின் உள்ளம் காண வருவாரோ மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ காரிகையின் உள்ளம் காண வருவாரோ மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ பெண் : நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி நேற்றுக் கேட்ட மொழி யாவும் காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென மாற்றி மாற்றி அலை மோதும் பெண் : நேற்றுப் பார்த்த முகம் நேற்று பார்த்த விழி நேற்றுக் கேட்ட மொழி யாவும் காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென மாற்றி மாற்றி அலை மோதும் அம்மம்மா அம்மா இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால் என்ன சுகமோ..... பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ காரிகையின் உள்ளம் காண வருவாரோ மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ பெண் : ஆடை தந்து தமிழ்வாடை தந்து மணமேடை வந்தவனைக் கண்டு ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர பேசி பார்க்கும் நினைவுண்டு பெண் : ஆடை தந்து தமிழ்வாடை தந்து மணமேடை வந்தவனைக் கண்டு ஆசை முந்தி வர நாணம் பிந்தி வர பேசி பார்க்கும் நினைவுண்டு அம்மம்மா அம்மா இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ காரிகையின் உள்ளம் காண வருவாரோ மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ பெண் : காவியத்தை மன ஓவியத்தில் அவன் தூவி வைத்த விதமென்ன கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும் விதம் கடவுள் தந்த கலை என்ன பெண் : காவியத்தை மன ஓவியத்தில் அவன் தூவி வைத்த விதமென்ன கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும் விதம் கடவுள் தந்த கலை என்ன அம்மம்மா அம்மா வண்ணக் கலையை கன்னி அடைய என்ன விலையோ பெண் : மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ காரிகையின் உள்ளம் காண வருவாரோ மாறியது நெஞ்சம்... மாற்றியவர் யாரோ
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Panama Pasama (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panama Pasama
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan