Roman script
Singer : T. M. Soundararajan and B. S. Sasireka Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Kurudaana kavinganukku oothaappoo enna Rosaappoo enna Sevidaana rasikanukku kalyaani enna Kaambodhi enna Male Part Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu Female Part Kalyaanaththil thaali katta Naathaswaram melamittaal Innaalilae nee pogiraai En thaaliyaivo nee ketkkiraai Female Part Naan pottu vaippaen poova vaippaen aiyaa Antha paakkiamthaan pari poguthaiyaa Pattu selaiyai vaangi thanthaaiaiyaa Pattu naan pogavae vella selaiaiayaa Male Part Katttililae udan iruppaal Kattai saainthidavae kadhariduvaal Kaattinilae vettum kuzhiyil Kalimannai vittaal yaariruppaar Male Part Pachchayilam mattaiyilae Meththai onnu podayilae Pachchaikiliyo vittu pirivaal Sikki thavippaal
Pantham paasam ellaam andrae vilagum Male Part Kurudaana kavinganukku oothaappoo enna Rosaappoo enna Sevidaana rasikanukku kalyaani enna Kaambodhi enna Female Part Uyir irunthaal perai solvaar Adhu paranthaal pinamthaan enpaar Neram kadanthaal maarum enpaar Intha nilaiyae vaazhkkai enpaar Male Part Moongililae muththu pallaakku Agil erikkaiyil soththu edharkku Kolliyittaal vegum elumbu Adhu kondu sella enna irukku Male Part Oorvalaththai nadaththida Oor janangal nadanthida Oorvalaththai nadaththida Oor janangal nadanthida Male Part Paarththu rasikka paadaiyilae avanirukka Yaar yaar pinnae vanthaar endravanaa arivaan Male Part Kurudaana kavinganukku oothaappoo enna Rosaappoo enna Sevidaana rasikanukku kalyaani enna Kaambodhi enna Male Part Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu Poo manakkaathu kuzhal manakkaathu Uyir irukkaathu udal thedum kaadu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன ஆண் : பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு.. பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு.. பெண் : கல்யாணத்தில் தாலிக் கட்ட நாதஸ்வரம் மேளமிட்டால் இந்நாளிலே நீ போகிறாய் என் தாலியைவோ நீ கேட்கிறாய் பெண் : நான் பொட்டு வைப்பேன் பூவ வைப்பேன் ஐயா அந்த பாக்கியம்தான் பறிப்போகுதய்யா பட்டுச் சேலையை வாங்கி தந்தாயய்யா பட்டு நான் போகவே வெள்ள சேலையய்யா ஆண் : கட்டிலிலே உடன் இருப்பாள் கட்டை சாய்ந்திடவே கதறிடுவாள் காட்டினிலே வெட்டும் குழியில் களிமண்ணை விட்டால் யாரிருப்பார் ஆண் : பச்சயிளம் மட்டையிலே மெத்தை ஒன்னு போடயிலே பச்சைக்கிளியோ விட்டுப் பிரிவாள் சிக்கித் தவிப்பாள் பந்தம் பாசம் எல்லாம் அன்றே விலகும் ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன பெண் : உயிர் இருந்தால் பேரை சொல்வார் அது பறந்தால் பிணம்தான் என்பார் நேரம் கடந்தால் மாறும் என்பார் இந்த நிலையே வாழ்க்கை என்பார் ஆண் : மூங்கிலிலே முத்துப் பல்லக்கு அகில் எறிக்கையில் சொத்து எதற்க்கு கொள்ளியிட்டால் வேகும் எலும்பு அது கொண்டு செல்ல என்ன இருக்கு ஆண் : ஊர்வலத்தை நடத்திட ஊர் ஜனங்கள் நடந்திட ஊர்வலத்தை நடத்திட ஊர் ஜனங்கள் நடந்திட ஆண் : பார்த்து ரசிக்க.....பாடையிலே அவனிருக்க யார் யார் பின்னே வந்தார் என்றவனா அறிவான் ஆண் : குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன காம்போதி என்ன ஆண் : பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு.. பூ மணக்காது குழல் மணக்காது உயிர் இருக்காது உடல் தேடும் காடு..
Song information
Singer: T. M. Soundararajan and B. S. Sasireka
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Nenjil Oru Ragam (1982) · Singer: T. M. Soundararajan and B. S. Sasireka · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: T. M. Soundararajan and B. S. Sasireka
- Film / album: Nenjil Oru Ragam
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar