Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Ilayaraja Male Part Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irukka Odiyathenna Poovizhthal moodiyathenna En manam vadiyathenna Male Part Oru maalaidavum Selai thodavum Velai piranthaalum Anthi maalai pozhuthil Leelai puriyum Aasai pirakathoo Male Part Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irukka Odiyathenna Poovizhthal moodiyathenna En manam vadiyathenna Female Part Mela thaalam muzhangum Muthal naal iravu Meni meethu ezhuthum Madal thaan uravu Thalaiyil irunthu patham varaiyil Thazhuvi kollalaam.. Male Part Athuvaraiyil naannnnn…aaa… Athuvaraiyil naann Analil mezhugoo Alai kadalil thaan Alaiyum padagooo Female Part Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irandum Vaadiyathenna Poovizhthal thediyathenna Ennidam naadiyathenna
Female Part Oru maalaidavum Selai thodavum Velai pirakkaathoo Anthi velai varaiyil Kaalai unathu Ullam poorukkathoo Male Part Kaatru vanthu thodathaan Koodiyae irukka Kadalil vanthu vizha thaan Nathiyae pirakka. Idaiyil vanthu thadaigal solla Evarum illaiyae…. Female Part Pirar ariyamalll…. Pirar ariyaamal Pazhagum podhu Bayam ariyaatha Idhayam yethu….. Female Part Veenai meethu viralgal Vizhunthaal raagam Raagam nooru ragangal Vilaithaal yogam.. Unathu ragam uthayam aagum Iniya veenai nann…nnn.. Male Part Suthi vilagaamal Inaiyum neram Suvai kuraiyaamal Irukkum geetham.. Female Part Kurunchi malaril Valintha rasaththai Urunja thudikum udhadu irandum Vaadiyathenna Male : Poovizhthal moodiyathenna Female : Ennidam naadiyathenna Male Part Oru maalaidavum Selai thodavum Velai piranthaalum Female : Anthi velai varaiyil Kaalai unathu Ullam poorukkathoo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன ஆண் : ஒரு மாலையிடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில் லீலை புரியும் ஆசை பிறக்காதோ ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன பெண் : மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு மேனி மீது எழுதும் மடல் தான் உறவு தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்.... ஆண் : அதுவரையில் நான்..... அதுவரையில் நான் அனலில் மெழுகோ அலைக் கடலில்தான் அலையும் படகோ பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன என்னிடம் நாடியதென்ன பெண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில் காலை உனது உள்ளம் பொறுக்காதோ ஆண் : காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே பெண் : பிறர் அறியாமல்....... பிறர் அறியாமல் பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது பெண் : வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம் ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம் உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான் ஆண் : சுதி விலகாமல் இணையும் நேரம் சுவைக் குறையாமல் இருக்கும் கீதம் பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன ஆண் : பூவிதழ் மூடியதென்ன பெண் : என்னிடம் நாடியதென்ன ஆண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறந்தாலும் பெண் : அந்த வேளை வரையில் காலை உனது உள்ளம் பொறுக்காதோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Azhage Unnai Aarathikkiren (1979) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Azhage Unnai Aarathikkiren
- Composer: Ilayaraja