Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part …………………….. Male Part Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku Kaadhalae nee illaiyendral ulagil enna irukku Kaadhalae unai sollathaanae pookalpoothu irukku Male Part Love love love everywhere You feel love more and more Love only meaning of the life Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku Male Part Kaadhalil thullum nenjangal Adhu mazhalai kuzhanthaiyaagum Bommaipol avar kaigalil Indha bhoomi virumbi suzhalum Nooru nilavugal thondriyae Oru nadhiyil mithanthidum Ullankaiyilae yenthiyae Adhai kaadhal parugidum Thaaiyin karuvarai nizhalaipol Amaidhi tharuvathu kaathalae Iravu pagalai marandhu thiriyum Uravu inikumae Paravai siragaai irandu idhayam Inaindhu parakkumae Male Part Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku Chorus ………………………… Male Part Thooramai migathooramai Irunthaalum nerukamaagum Thedugindra mana sorvilum Sugamaagum andha sogam Kaadhal enbathu kaatraipol.. Adhai nirutha mudiyuma Kaadhal enbathu nerupaipol.. Adhai anaika mudiyuma Kaadhal jodigal thorkalam Kaadhal thorpathu illayae Uravum pirivum ulagil irukkum Idhayam piriyuma Malargal uthirum uthirnthu malarum Paruvam marakuma Males : Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku Male Part Kaadhalae nee illaiyendral ulagil enna irukku Kaadhalae unai sollathaanae pookalpoothu irukku Males : Love love love everywhere You feel love more and more Love only meaning of the life Kaadhalae illadha dhesam ulagil engu irukku Kaadhalae illadha jeevan endha ulagail irukku
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ............................. ஆண் : காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு காதலே நீ இல்லையென்றால் உலகில் என்ன இருக்கு காதலே உன்னை சொல்லத்தானே பூக்கள் பூத்து இருக்கு ஆண் : Love love love everywhere You feel love more and more Love only meaning of the life காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு ஆண் : காதலில் துள்ளும் நெஞ்சங்கள் அது மழலை குழந்தையாகும் பொம்மைபோல் அவர் கைகளில் இந்த பூமி விரும்பி சுழலும் நூறு நிலவுகள் தோன்றியே ஒரு நதியில் மிதந்திடும் உள்ளங்கையிலே ஏந்தியே அதை காதல் பருகிடும் ஆண் : தாயின் கருவறை நிழலைப்போல் அமைதி தருவது காதலே இரவு பகலை மறந்து திரியும் உறவு இனிக்குமே பறவை சிறகாய் இரண்டு இதயம் இணைந்து பறக்குமே ஆண் : காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு குழு : .......................... ஆண் : தூரமாய் மிக தூரமாய் இருந்தாலும் நெருக்கமாகும் தேடுகின்ற மன சோர்விலும் சுகமாகும் அந்த சோகம் காதல் என்பது காற்றைப்போல்...... அதை நிறுத்த முடியுமா காதல் என்பது நெருபைபோல்...... அதை அணைக்க முடியுமா ஆண் : காதல் ஜோடிகள் தோற்கலாம் காதல் தோற்பது இல்லையே உறவும் பிரிவும் உலகில் இருக்கும் இதயம் பிரியுமா மலர்கள் உதிரும் உதிர்ந்து மலரும் பருவம் மறக்குமா ஆண்கள் : காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு ஆண் : காதலே நீ இல்லையென்றால் உலகில் என்ன இருக்கு காதலே உன்னை சொல்லத்தானே பூக்கள் பூத்து இருக்கு ஆண்கள் : Love love love everywhere You feel love more and more Love only meaning of the life காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Naadi Thudikuthadi (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Naadi Thudikuthadi
- Composer: Ilayaraja