Roman script
Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Kalyaana pudaivai katti Kaaleduththu manaiyil vaiththu Kalyaana pudaivai katti Kaaleduththu manaiyil vaiththu Pallaakku polae nindren nerilae Antha paruva magan paranthu vittaan thaerilae Antha paruva magan paranthu vittaan thaerilae Female Part Uruvamendra mullaiyilae Ullamendra thaenaiyalli Uruvamendra mullaiyilae Ullamendra thaenaiyalli Oruvanukku vaiththirunthaen uravilae Avan odameri sendru vittan iravilae Female Part Kalyaana pudaivai katti Kaaleduththu manaiyil vaiththu Pallaakku polae nindren nerilae Antha paruva magan paranthu vittaan thaerilae Female Part Seppu silai maeni endru Seppi vantha deva magan Seppu silai maeni endru Seppi vantha deva magan Seppiyathu yaavumindru poimaiyae Naan seppu silai aanathuthaan unmaiyae Naan seppu silai aanathuthaan unmaiyae Female Part Maanda udal marainthaalum Mannil sendru olinthaalum Maanda udal marainthaalum Mannil sendru olinthaalum Meendum vanthu piranthaalum uravilae Enthan maeni kaanum thalaivanavan oruvanae Enthan maeni kaanum thalaivanavan oruvanae Female Part Kalyaana pudaivai katti Kaaleduththu manaiyil vaiththu Pallaakku polae nindren nerilae Antha paruva magan paranthu vittaan thaerilae Antha paruva magan paranthu vittaan thaerilae…ae….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : கல்யாணப் புடவை கட்டி காலெடுத்து மனையில் வைத்து கல்யாணப் புடவை கட்டி காலெடுத்து மனையில் வைத்து பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே பெண் : உருவமென்ற முல்லையிலே உள்ளமென்ற தேனையள்ளி உருவமென்ற முல்லையிலே உள்ளமென்ற தேனையள்ளி ஒருவனுக்கு வைத்திருந்தேன் உறவிலே அவன் ஒடமேறிச் சென்று விட்டான் இரவிலே பெண் : கல்யாணப் புடவை கட்டி காலெடுத்து மனையில் வைத்து பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே பெண் : செப்புச் சிலை மேனி என்று செப்பி வந்த தேவ மகன் செப்புச் சிலை மேனி என்று செப்பி வந்த தேவ மகன் செப்பியது யாவுமின்று பொய்மையே நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே பெண் : மாண்ட உடல் மறைந்தாலும் மண்ணில் சென்று ஒளிந்தாலும் மாண்ட உடல் மறைந்தாலும் மண்ணில் சென்று ஒளிந்தாலும் மீண்டும் வந்து பிறந்தாலும் உறவிலே எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே பெண் : கல்யாணப் புடவை கட்டி காலெடுத்து மனையில் வைத்து பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே....ஏ....
Song information
Singer: P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu