Roman script
Singer : Siyak Mohammed Music by : M. S. Vishwanathan Male Part Kai kotti sirippaargal Ooraar sirippargal Vilaiyaattu kalyaanamae Tharum vibareedha uravaagumae Male Part Kai kotti sirippaargal Ooraar sirippargal Vilaiyaattu kalyaanamae Tharum vibareedha uravaagumae Thalai maari kaal maarumae Angu sondhangal thadumaarumae Male Part Veenai than narambai Viral meettum podhu Mirudhanga oli thondrumaa Vilakkaettri eduthu Pagal neram vaithaal Izhaigindra oli thondurmaa Male Part Karakkindra paalai Surakkindra madikkul Anuppudhal nadakkaadhammaa Karakkindra paalai Surakkindra madikkul Anuppudhal nadakkaadhammaa Pirakkindra aasai Thavaraaga irundhaal Nadakkavum koodaadhammaa Male Part Vilaiyaattu kalyaanamae Tharum vibareedha uravaagumae Thalai maari kaal maarumae Angu sondhangal thadumaarumae Kai kotti sirippaargal Oooraar sirippargal
தமிழ்
பாடகர் : சேக் முகம்மது இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே தலைமாறி கால் மாறுமே அங்கு சொந்தங்கள் தடுமாறுமே ஆண் : வீணை தன் நரம்பை விரல் மீட்டும்போது மிருதங்க ஒலி தோன்றுமா விளக்கேற்றி எடுத்து பகல் நேரம் வைத்தால் இழைக்கின்ற ஒளி தோன்றுமா ஆண் : கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல் நடக்காதம்மா கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல் நடக்காதம்மா பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால் நடக்கவும் கூடாதம்மா ஆண் : விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே தலைமாறி கால் மாறுமே அங்கு சொந்தங்கள் தடுமாறுமே ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்
Song information
Singer: Siyak Mohammed
Music by: M. S. Vishwanathan
Release information: From Apoorva Raagangal (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Siyak Mohammed
- Film / album: Apoorva Raagangal
- Composer: M. S. Vishwanathan