Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Soundaryan Lyrics by : Vairamuthu Female Part Hey thaananaanaa thaananaanaa thananaanaa Hey thananaanaa thananaanaa thananaanaa Hey thananaanaa thananaanaa thananaanaa Male Part Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annai illai Athanaal oorinam thaanae Nadhi endraal nurai undu Vaazhvendral kurai undu Female Part Aipasi vandhaal adaimazhai kaalam Silar aayul muzhuthum aipasi maatham Male Part Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annaiillai Athanaal verinam thaanae Male Part Androru naal chinna pillayilae Un thaai erindhaal sondha kolliyilae Vendhuvittaai chinna pinjinilae Patta vadu innum nenjinilae Male Part Thaaimai illaamal yaarum ingillai Garbam illaamal kadavul ingillai Thaaipaalai pola theertham vaerillai Aval vaai sollai pola vedham vaerillai Male Part Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annai illai Athanaal verinam thaanae Nadhiendraal nurai undu Vaazhvendraal kurai undu Humming : …………….. Male Part Thee irundhal angae pugaiirukkum Uravirunthal konjam pagaiyirukkum Kadalinrunthaal engo karairukkum Kathaiirunthaal edho mudivirukkum Male Part Vaazhvum varaamal saavum naerammal Rendum illamaal mannil vaazhgindraai Penmai kandalae thaaimai kaangindraai Palar poojai kondaadum poovaai vaazhgindraai Female Part Anbulla maganae azhuthathu podhum Punnagai sindhu idhu ini pookalin maatham Male Part Kadavulum neeyum oru thaaipillai Iruvarum thanimaram thaanae Avanukkum unakuum annai illai Athanal verinam thaanae Nadhiendraal nurai undu Vaazhvendraal kurai undu
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து குழு : ஹே..தனனானா தனனானா ஹே..தனனானா தனனானா தனனானா ஹே..தனனானா தனனானா ஹே..தனனானா தனனானா தனனானா ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம் சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம் ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு பெண் : ஓஓஓஒ....ஓஓஓஒ.... ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும் உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும் கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும் கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும் ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல் ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய் பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய் பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய் பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும் புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம் ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை இருவரும் தனிமரம் தானே அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை அதனால் ஓரினம் தானே நதியென்றால் நுரை உண்டு வாழ்வென்றால் குறை உண்டு....
Song information
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Soundaryan
Lyrics by: Vairamuthu
Release information: From Sindhu Nathi Poo (1994) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Soundaryan
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Sindhu Nathi Poo
- Composer: Soundaryan
- Lyricist: Vairamuthu