Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Naesam kuraiyaamal vaazhum Nenjam poraadudho Kanavan manaivi kudumba vaazhkkai Kalaindhu poga kanneeril midhakkum Male Part Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Male Part Oru noolil maalai polae uruvaana pookkalae Idhazh vaadi vaadi indru sarugaagi ponadhae Naayagan naayagi andrilgal pol Vaazhndhadhor vaazhkkai thaan kaanal neer pol Dhevan dhevi kaadhal maevi Vaazhndha naatkal kanavaagi poga Male Part Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Naesam kuraiyaamal vaazhum Nenjam poraadudho Male Part Ival thaayin tholil saayum azhagaana paingili Mana maalai soodum naalai Edhir paartha poongodi Aasaiyin oonjalil aadiya maan Indha naal ingu thaan vaadinaal yen Thaayum saeyum oomai polae Vaartthai yaedhum pesaamal thavikka Male Part Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho Naesam kuraiyaamal vaazhum Nenjam poraadudho Kanavan manaivi kudumba vaazhkkai Kalaindhu poga kanneeril midhakkum Male Part Kaalam mazhai kaalam thaano Kaatru puyal aanadho
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ நேசம் குறையாமல் வாழும் நெஞ்சம் போராடுதோ கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கலைந்து போக கண்ணீரில் மிதக்கும் ஆண் : காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ ஆண் : ஒரு நூலில் மாலை போலே உருவான பூக்களே இதழ் வாடி வாடி இன்று சருகாகிப் போனதே நாயகன் நாயகி அன்றில்கள் போல் வாழ்ந்ததோர் வாழ்க்கை தான் கானல் நீர் போல் தேவன் தேவி காதல் மேவி வாழ்ந்த நாட்கள் கனவாகிப் போக ஆண் : காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ நேசம் குறையாமல் வாழும் நெஞ்சம் போராடுதோ ஆண் : இவள் தாயின் தோளில் சாயும் அழகான பைங்கிளி மண மாலை சூடும் நாளை எதிர் பார்த்த பூங்கொடி ஆசையின் ஊஞ்சலில் ஆடிய மான் இந்த நாள் இங்கு தான் வாடினாள் ஏன் தாயும் சேயும் ஊமை போலே வார்த்தை ஏதும் பேசாமல் தவிக்க ஆண் : காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ நேசம் குறையாமல் வாழும் நெஞ்சம் போராடுதோ கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கலைந்து போக கண்ணீரில் மிதக்கும் ஆண் : காலம் மழைக் காலம் தானோ காற்று புயலானதோ
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Vidinja Kalyanam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Vidinja Kalyanam
- Composer: Ilayaraja