Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Janaganin magalai manamagalaaga Raman ninaithirunthaan Janaganin magalai manamagalaaga Raman ninaithirunthaan Rajaraman ninaithirunthaan Female Part Aval suyamvaram kolla Mannavar silarum Midhilaikku vandhirundhaar Aval suyamvaram kolla Mannavar silarum Midhilaikku vandhirundhaar Midhilaikku vandhirundhaar Female Part Janaganin magalai manamagalaaga Raman ninaithirunthaan Rajaraman ninaithirunthaan Female Part Mani muthu maanikka madathil irunthu Jaanaki paarthirunthaal Mani muthu maanikka madathil irunthu Jaanaki paarthirunthaal Iru mai vizhi sivakka malaradi kothikka Ramanai thedi nindraal Iru mai vizhi sivakka malaradi kothikka Ramanai thedi nindraal Naanam oru puram aasai oru puram Kavalai maru puram aval nilamai thiripuram Female Part Kothikindra moochu maalaiyil vilunthu Maniyum karugiyathe Aval koonthalil irundha malarum Janaki nilamaiku urugiyadhae Female Part Janaganin magalai manamagalaaga Raman ninaithirunthaan Female Part Nenjai maraithaal ninaivai maraithaal Kangalai maraikkavillai Nenjai maraithaal ninaivai maraithaal Kangalai maraikkavillai Aval manjal mugathil odiya kanneer Maraithum maraiya villai Munivan mun puram sreeraman pinpuram Seethai thaniyidam aval sindhai avanidam Female Part Mannavar ellaam suyam varam naadi Mandapam vandhu vittar Oru mannavan yaaro villai eduthaan Janaki kalangi vittaal Janaki kalangi vittaal Female Part Janaganin magalai manamagalaaga Raman ninaithirunthaan Rajaraman ninaithirunthaan
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் ராஜாராமன் நினைத்திருந்தான் பெண் : அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் மிதிலைக்கு வந்திருந்தார் பெண் : ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் ராஜாராமன் நினைத்திருந்தான் பெண் : மணி முத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள் மணி முத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள் இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள் இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள் நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம் அவள் நிலைமை திரிபுரம் பெண் : கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே பெண் : ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் பெண் : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம் பெண் : மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார் ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள் ஜானகி கலங்கி விட்டாள்... பெண் : ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் ராஜாராமன் நினைத்திருந்தான்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Rojavin Raja (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rojavin Raja
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan