Roman script
Singer : P. Susheela Music by : S. Dakshinamurthy Female Part Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Female Part Penn paadhi aan paadhi padaithaan Ninaivil per paadhi avar nenjil maraithaan Penn paadhi aan paadhi padaithaan Ninaivil per paadhi avar nenjil maraithaan Kann paadhi vaai meedhi pesum Uyar kaadhalai perum paadhi valarthaan Kaadhalai perum paadhi valarthaan Female Part Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Female Part Nanmaiyudan perum paadhi theemai Vaazhkai nadagathil muzhu paadhi poimai Nanmaiyudan perum paadhi theemai Vaazhkai nadagathil muzhu paadhi poimai Inbathai siru paadhi vaithu Inbathai siru paadhi vaithu Yeno thunbathai perum paadhi thandhaan Female Part Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan Female Part Mudhal paadhi vaazhvukku ilamai Pin mudikkindra paadhikku mudhumai Idhil paadhi naalukku thookkam Pin irukkindra paadhiyellaam yekkam Female Part Irul paadhi oli paadhi amaithaan Iraivan edhilumae sari paadhi koduthaan
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் பெண் : பெண் பாதி ஆண் பாதி படைத்தான் நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான் பெண் பாதி ஆண் பாதி படைத்தான் நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான் கண் பாதி வாய் மீதி பேசும் உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்... காதலை பெரும் பாதி வளர்த்தான்... பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் பெண் : நன்மையுடன் பெரும் பாதி தீமை வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை நன்மையுடன் பெரும் பாதி தீமை வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை இன்பத்தை சிறு பாதி வைத்து இன்பத்தை சிறு பாதி வைத்து ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்..... பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான் பெண் : முதல் பாதி வாழ்வுக்கு இளமை பின் முடிகின்ற பாதிக்கு முதுமை இதில் பாதி நாளுக்கு தூக்கம் பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்.. பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான் இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
Song information
Singer: P. Susheela
Music by: S. Dakshinamurthy
Release information: From Devi – 1968 Film (1968) · Singer: P. Susheela · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Devi – 1968 Film
- Composer: S. Dakshinamurthy