Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Irandu kiligal saernthu nadaththum Inba kadhal naadagam Oo….indru thodangum kaaviyam Female Part Irandu kiligal saernthu nadaththum Inba kadhal naadagam Oo….indru thodangum kaaviyam Female Part Thiranda paruvm aadi paadum Sittu kuruvi oviyam Oo….thiranda paruvam aadi paadum Sittu kuruvi oviyam Serum sugangal aayiram Female Part Irandu kiligal saernthu nadaththum Inba kadhal naadagam Oo….indru thodangum kaaviyam Female Part Iraivan potta vithiyin Kottil idhuvum oru veedu Thalaivi ingae thunaivan engae Naduvil oru kodu Female Part Ingae aadal paadal sarasa koodal Nadana pennodu Amma idhuvum panpaadu Amma idhuvum panpaadu Female Part Thanga padhumai angam muzhuthum thazhuvum kairasi Thazhuvi thazhuvi thannai maranthu mayakkum magarasi Ingae koodal illai shanthi illai Kungumam poosi amma paavam ival rasi Amma paavam ival rasi Female Part Ulla poruththam udalum porutham Ondru saernthaarkal urakkam indri Vidiya vidiya magizhnthu vaazhnthaargal Ingae thaali ondrae intha kazhuththu Thaanga vaiththaargal paavam yaenga vaiththaargal
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும் இன்பக் காதல் நாடகம் ஓ....இன்று தொடங்கும் காவியம்.. பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும் இன்பக் காதல் நாடகம் ஓ....இன்று தொடங்கும் காவியம்.. பெண் : திரண்ட பருவம் ஆடிப் பாடும் சிட்டுக் குருவி ஓவியம் ஓ.....திரண்ட பருவம் ஆடிப் பாடும் சிட்டுக் குருவி ஓவியம் சேரும் சுகங்கள் ஆயிரம்....... பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும் இன்பக் காதல் நாடகம் ஓ....இன்று தொடங்கும் காவியம்.. பெண் : இறைவன் போட்ட விதியின் கோட்டில் இதுவும் ஒரு வீடு தலைவி இங்கே துணைவன் எங்கே நடுவில் ஒரு கோடு பெண் : இங்கே ஆடல் பாடல் சரஸக் கூடல் நடனப் பெண்ணோடு.... அம்மா இதுவும் பண்பாடு........ அம்மா இதுவும் பண்பாடு........ பெண் : தங்கப் பதுமை அங்கம் முழுதும் தழுவும் கைராசி தழுவி தழுவி தன்னை மறந்து மயக்கும் மகராசி இங்கே கூடல் இல்லை சாந்தி இல்லை குங்குமம் பூசி அம்மா பாவம் இவள் ராசி...... அம்மா பாவம் இவள் ராசி..... பெண் : உள்ளப் பொருத்தம் உடலும் பொருத்தம் ஒன்று சேர்ந்தார்கள் உறக்கம் இன்றி விடிய விடிய மகிழ்ந்து வாழ்ந்தார்கள் இங்கே தாலி ஒன்றே இந்தக் கழுத்து தாங்க வைத்தார்கள் பாவம் ஏங்க வைத்தார்கள்
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Sorkkam Naragam (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sorkkam Naragam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan