Roman script

Singers : Sathyaprakash and Vaishali

Music by : N. R. Ragunanthan

Female Part

Aaa….aaaa…aaa….aaaa….

Aaa….aaaa…aaa….aaaa….haaa…aaa…

Male Part

Ilamayin kaatil

Mudhumayin moongil

Isaikindra paatu

Ketkirathaa

Female Part

Alai kadal pola

Anubhavam modhi

Idhayathil saaral

Adikirathaa

Male Part

Nadhigalil viluntha

Ilai elaam

Nadhi vazhi sellum

Padagu thaan

Female Part

Vidhi vazhi

Inaindhu thirigirom

Parakkavae vendum

Siragu thaan

Male Part

Kaatrodu mella kai korthu

Pala kadhai pesi naam nadakalaam

Male Part

Ilamayin kaatil

Mudhumayin moongil

Isaikindra paatu

Ketkirathaa

Female Part

Alai kadal pola

Anubhavam modhi

Idhayathil saaral

Adikirathaa

Female Part

Oh yaar ivan endru

Yaar ival endru

Thoorathil paravai paarkirathae

Female Part

Oh baarangal yaavum

Thooramaai oda

Eeramaai kangal thulirkirathae

Male Part

Ada netru adhu

Odi ponathae

Varum naalai engeyo ullathae

Male Part

Intha nimidam

Nam kaiyil ullathae

Kondaada ul nenjam solluthae

Male & Female :

Pudhu vasantha kaalam

Nam kilaiyil thondrum

Vazhi paadhai dhorum

Vanna poo manamae

Pon vidiyal varum vaanil

Poru manamae

Male Part

Ilamayin kaatil

Mudhumayin moongil

Isaikindra paatu

Ketkirathaa

Female Part

Alai kadal pola

Anubhavam modhi

Idhayathil saaral

Adikirathaa

Male Part

Ohoo nee oru payani

Naan oru payani

Padhaiyo romba neendadhadi

Male Part

Ohoo nee oru kanavu

Naan oru kanavu

Kangalo nammai vendudhadi

Female Part

Siru poovil paniyaaga

Irukalaam

Kadum veyilil karinthaalum

Sirikalaam

Female Part

Nam inba thunbangal

Marakalaam

Adiyodu veraaga pirakalaam

Male & Female :

Sila kadhaigal thodarum

Sila kadhaigal mudiyum

Ithu mudintha piragum

Ingu thodarkirathae

Ithu vidaigal kedaiyaatha

Vidukadhaiyae…..

தமிழ்

பாடகர்கள் : சத்யபிரகாஷ்

மற்றும் வைஷாலி

இசையமைப்பாளர் :

என். ஆர். ரகுநாதன்

பெண் : ஆ...ஆ.....ஆ....ஆ......

ஆ....ஆ...ஆ....ஆ......ஆ....

ஆண் : இளமையின் காட்டில்

முதுமையின் மூங்கில்

இசைகின்ற பாட்டு

கேட்கிறதா

பெண் : அலை கடல் போல

அனுபவம் மோதி

இதயத்தில் சாரல்

அடிக்கிறதா

ஆண் : நதிகளில் விழுந்த

இலை எல்லாம்

நதி வழி செல்லும்

படகு தான்

பெண் : விதி வழி

இணைந்து திரிகிறோம்

பறக்கவே வேண்டும்

சிறகு தான்

ஆண் : காற்றோடு

மெல்ல கைகோர்த்து

பல கதை பேசி நாம் நடக்கலாம்

ஆண் : இளமையின் காட்டில்

முதுமையின் மூங்கில்

இசைகின்ற பாட்டு

கேட்கிறதா

பெண் : அலை கடல் போல

அனுபவம் மோதி

இதயத்தில் சாரல்

அடிக்கிறதா

பெண் : ஓ.. யார் இவன் என்று

யார் இவள் என்று

தூரத்தில் பறவை பார்க்கிறதே

பெண் : ஓ... பாரங்கள் யாவும்

தூரமாய் ஓட

ஈரமாய் கண்கள் துளிர்க்கிறதே

ஆண் : அட நேற்று அது

ஓடி போனதே

வரும் நாளை எங்கேயோ உள்ளதே

ஆண் : இந்த நிமிடம்

நம் கையில் உள்ளதே

கொண்டாட உள் நெஞ்சம் சொல்லுதே

ஆண் மற்றும் பெண் :

புது வசந்த காலம்

நம் கிளையில் தோன்றும்

வழி பாதை தோறும்

வண்ண பூ மனமே

பொன் விடியல் வரும் வானில்

பொறு மனமே

ஆண் : இளமையின் காட்டில்

முதுமையின் மூங்கில்

இசைகின்ற பாட்டு

கேட்கிறதா

பெண் : அலை கடல் போல

அனுபவம் மோதி

இதயத்தில் சாரல்

அடிக்கிறதா

ஆண் : ஓஹோ.. நீ ஒரு பயணி

நான் ஒரு பயணி

பாதையோ ரொம்ப நீண்டதடி

ஆண் : ஓஹோ... நீ ஒரு கனவு

நான் ஒரு கனவு

கண்களோ நம்மை வேண்டுதடி

பெண் : சிறு பூவில் பனியாக

இருக்கலாம்

கடும் வெயிலில் கரைந்தாலும்

சிரிக்கலாம்

பெண் : நம் இன்ப துன்பங்கள்

மறக்கலாம்

அடியோடு வேராக பிறக்கலாம்

ஆண் மற்றும் பெண் :

சில கதைகள் தொடரும்

சில கதைகள் முடியும்

இது முடிந்த பிறகும்

இங்கு தொடர்கிறதே

இது விடைகள் கிடையாதா

விடுகதையே........

Song information

Singers: Sathyaprakash and Vaishali

Music by: N. R. Ragunanthan

Release information: From Om (2018) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song