Roman script
Singers : G. V. Prakash Kumar and Ranina Reddy Music by : G. V. Prakash Kumar Chorus Ooooo…ooooo…oooo…. Male Part Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya Male Part Ven megha thiraiyai thandi Unathu azhagai parthenae Minnal pen neethan endru Velicham konjam kettenae Male Part Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae Chorus Ooooo…ooooo…oooo…. Male Part Pirai nilavena pennae undhan Puruvam kandenae Ival enakenna kannai moodi Garvam kondenae Pada padapudan kaadhal solla Arugil vandhenae Irunthum indha mounam yen Male Part Pagal iravai kaanavillai Pozhuthenakku odavillai Partha vizhi moodavillayae..ae…. Male Part Idhayathilae erimalayai Sumapathupol iru nilaiyai Thanthu vittu thoongathae..ae….. Male Part Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam
Siru melugai mella urugiyathae Male Part Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya Chorus Ooooo…ooooo…oooo…. Male Part Mazhai varum ena Vaanum paathu pookal pookathu Mara kilaiyanil pookum pookal Thaenai varkaadhu Ninaipathai ninai nenjae Kaadhal endrum thokkathu Viraivinil mazhai thoorumae Male Part Idaiveligal iruppathellam Kadaivizhiyil theriyathu Kaadhal athai ariyathae..ae… Male Part Nadaivandi pillai manam Vilunthalum ezhunthu varum Un vazhiyil thodarnthu varum..ae…. Male Part Oru panipol undhan ninaivu En manathil vandhu irangiyathae Un arugae endhan idhayam Siru melugai mella urugiyathae Male Part Hey pennae hey pennae Un per than devadhaiyaa Ezhil konjum muga thiraiyil Manjal nira thamaraiya Male Part Ven megha thiraiyai thandi Unathu azhagai parthenae Minnal pen neethan endru Velicham konjam kettenae Chorus Ooooo…ooooo…oooo….
தமிழ்
பாடகி : ரனினா ரெட்டி பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : ஓ ஓ ஓ ஓ......... ஆண் : ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா ஆண் : வெண்மேகத் திரையைத் தாண்டி உனது அழகைப் பார்த்தேனே மின்னல் பெண் நீதான் என்று வெளிச்சம் கொஞ்சம் கேட்டேனே ஆண் : ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே குழு : ஓ ஓ ஓ ஓ......... ஆண் : பிறைநிலவென பெண்ணே உந்தன் புருவம் கண்டேனே இவள் எனக்கென கண்ணை மூடி கர்வம் கொண்டேனே படபடப்புடன் காதல் சொல்ல அருகில் வந்தேனே இருந்தும் இந்த மௌனம் ஏன் ஆண் : பகல் இரவைக் காணவில்லை பொழுதெனக்கு ஓடவில்லை பார்த்த விழி மூடவில்லையே ஆண் : இதயத்திலே எரிமலையை சுமப்பது போல் இரு நிலையை தந்துவிட்டுத் தூங்காதே ஆண் : ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே ஆண் : ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா குழு : ஓ ஓ ஓ ஓ......... ஆண் : மழை வரும் என வானும் பாத்து பூக்கள் பூக்காது மரக் கிளையினில் பூக்கும் பூக்கள் தேனை வார்க்காது நினைப்பதை நினை நெஞ்சே காதல் என்றும் தோற்காது விரைவினில் மழைத் தூறுமே ஆண் : இடைவெளிகள் இருப்பதெல்லாம் கடை விழியில் தெரியாது காதல் அதை அறியாதே ஆண் : நடைவண்டிப் பிள்ளை மனம் விழுந்தாலும் எழுந்து வரும் உன் வழியில் தொடர்ந்து வரும் ஏ ஆண் : ஒரு பனிபோல் உந்தன் நினைவு என் மனதில் வந்து இறங்கியதே உன் அருகே எந்தன் இதயம் சிறு மெழுகாய் மெல்ல உருகியதே ஆண் : ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் பேர்தான் தேவதையா எழில் கொஞ்சும் முக திரையில் மஞ்சள் நிற தாமரையா ஆண் : வெண்மேகத் திரையைத் தாண்டி உனது அழகைப் பார்த்தேனே மின்னல் பெண் நீதான் என்று வெளிச்சம் கொஞ்சம் கேட்டேனே குழு : ஓ ஓ ஓ ஓ.........
Song information
Singers: G. V. Prakash Kumar and Ranina Reddy
Music by: G. V. Prakash Kumar
Release information: From Meendum Oru Kadhal Kadhai (2016) · Lyricist: Thamarai, Na. Muthu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Ranina Reddy
- Film / album: Meendum Oru Kadhal Kadhai
- Composer: G. V. Prakash Kumar