Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Male Part Pennaai pirandhavar Vaazhkkaiyae poraattamaa Annaalil yevano ezhudhi vaitha Maaraattamaa O iraivaa badhil kooru ho… oo… Male Part Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Male Part Petraval poi chaerndhaal Thandhai yena irundhavan thani aanaan Matraval thaayaanaal Kottugindra kodumaiyin vadivaanaal Male Part Palli sellum vayadhinilae Katru konda paadathukku alavillaiyae Sumakkira vayadhillaiyae Indha chumai tholaigira vazhi illaiyae Male Part Sogam ondrae sondham endru Sorna kiliyum thani aanaal Sorndhu sorndhu oindhu nindru Kaaindhu pona kani aanaal Thodarum thuyarangal ivalai Vairangal aakaadho malar pookkaadho Male Part Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho
Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Chorus ………………………… Male Part Thaniyaai pen oruthi Ulaginil vaazhvadhu saathiyamaa Thunai indri vaazhvadhendraal Unmayil nadakkindra kaariyamaa Male Part Pen oruthi veedhiyil sendraal Thurathidum kangalukku kanakkillaiyae Pangu pottu kedukka ennum Kedu ketta aangalukku vazhakkillaiyae Male Part Kaama paeigal aadum aattam Kaala dhevan ivar kaiyil Kaanbadhellaam miruga koottam Manidha inamae yaar kaiyil Vaazha vazhi indri saaga vidhi indri Azhuvaaro mannil vizhuvaaro Male Part Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Male Part Pennaai pirandhavar Vaazhkkaiyae poraattamaa Annaalil yevano ezhudhi vaitha Maaraattamaa O iraivaa badhil kooru ho… oo… Male Part Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஓ... ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ.... ஆண் : பெண்ணாய் பிறந்தவர் வாழ்க்கையே போராட்டமா அந்நாளில் எவனோ எழுதி வைத்த மாறாட்டமா ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ... ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஓ... ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ... ஆண் : பெற்றவள் போய்ச் சேர்ந்தாள் தந்தை என இருந்தவன் தனி ஆனான் மற்றவள் தாயானாள் கொட்டுகின்ற கொடுமையின் வடிவானாள் ஆண் : பள்ளி செல்லும் வயதினிலே கற்றுக் கொண்ட பாடத்துக்கு அளவில்லையே சுமக்கிற வயதில்லையே இந்தச் சுமை தொலைகிற வழி இல்லையே ஆண் : சோகம் ஒன்றே சொந்தம் என்று சொர்ணக்கிளியும் தனி ஆனாள் சோர்ந்து சோர்ந்து ஓய்ந்து நின்று காய்ந்து போன கனி ஆனாள் ஆண் : தொடரும் துயரங்கள் இவளை வைரங்கள் ஆக்காதோ மலர் பூக்காதோ ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ... ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ... ஆண் : தனியாய் பெண் ஒருத்தி உலகினில் வாழ்வது சாத்தியமா துணை இன்றி வாழ்வதென்றால் உண்மையில் நடக்கின்ற காரியமா ஆண் : பெண் ஒருத்தி வீதியில் சென்றால் துரத்திடும் கண்களுக்கு கணக்கில்லையே பங்கு போட்டு கெடுக்க எண்ணும் கேடு கெட்ட ஆண்களுக்கு வழக்கில்லையே ஆண் : காமப் பேய்கள் ஆடும் ஆட்டம் கால தேவன் இவர் கையில் காண்பதெல்லாம் மிருகக் கூட்டம் மனித இனமே யார் கையில் ஆண் : வாழ வழி இன்றி சாக விதி இன்றி அழுவாரோ மண்ணில் விழுவாரோ ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ... ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ... ஆண் : பெண்ணாய் பிறந்தவர் வாழ்க்கையே போராட்டமா அந்நாளில் எவனோ எழுதி வைத்த மாறாட்டமா ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ... ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ... ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ...
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kumbakonam Gopalu (1998) · Lyricist: Vasan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kumbakonam Gopalu
- Composer: Ilayaraja