Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Enakkoru manippuraa jodiyendru irunthathu Adharkkoru thunai vara neenda dhooram paranthathu Manamellaam antha ninaivuthaan Vizhiyellaam antha kanavuthaan Male Part Azhagu paarththu azhagu paarththu Ezhuthi vaiththa ponmaanai Anaiththavan naanthaanae ennodu indru Aduththavan kondaanae thannodu Male Part Vizhigalil neeroda unarchchigal poraada Vizhigalil neeroda unarchchigal poraada Enakkillai oru koodu irunthenna uyirodu Male Part Enakkoru manippuraa jodiyendru irunthathu Adharkkoru thunai vara neenda dhooram paranthathu Manamellaam antha ninaivuthaan Vizhiyellaam antha kanavuthaan Male Part Avalukkaaga avalukkaaga Azhuvathenna nenjae nee Thalaivithi kanneeril azhiyumaa andru Vaguththathai nee maatra mudiyumaa Male Part Ularanthathu poonthottam adharkkillai neerottam Ularanthathu poonthottam adharkkillai neerottam Udhirnthathu arumpaathu kadanthathu thirumpaathu Male Part Enakkoru manippuraa jodiyendru irunthathu Adharkkoru thunai vara neenda dhooram paranthathu Manamellaam antha ninaivuthaan Vizhiyellaam antha kanavuthaan Male Part Oorazhaiththu uravzhaiththu Pesi vaiththa kalyaanam Manjal mudi podaamal mudinthathae rendu Manangalaum koodaamale pirnthathae Male Part Karaiyinil meenaaga thavippavan naanaaga Karaiyinil meenaaga thavippavan naanaaga Thalaivanain nizhalaaga kulamagam nee vaazhga Male Part Enakkoru manippuraa jodiyendru irunthathu Adharkkoru thunai vara neenda dhooram paranthathu Manamellaam antha ninaivuthaan Vizhiyellaam antha kanavuthaan
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்.... ஆண் : அழகு பார்த்து அழகு பார்த்து எழுதி வைத்த பொன்மானை அணைத்தவன் நான்தானே என்னோடு இன்று அடுத்தவன் கொண்டானே தன்னோடு ஆண் : விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட எனக்கில்லை ஒரு கூடு இருந்தென்ன உயிரோடு ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்.... ஆண் : அவளுக்காக அவளுக்காக அழுவதென்ன நெஞ்சே நீ தலைவிதி கண்ணீரில் அழியுமா அன்று வகுத்ததை நீ மாற்ற முடியுமா ஆண் : உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம் உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம் உதிர்ந்தது அரும்பாது கடந்தது திரும்பாது ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்.... ஆண் : ஊரழைத்து உறவழைத்து பேசி வைத்த கல்யாணம் மஞ்சள் முடி போடாமல் முடிந்ததே ரெண்டு மனங்களும் கூடாமல் பிரிந்ததே ஆண் : கரையினில் மீனாக தவிப்பவன் நானாக கரையினில் மீனாக தவிப்பவன் நானாக தலைவனின் நிழலாக குலமகள் நீ வாழ்க..... ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்த கனவுதான்....
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Jodi Pura (1983) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Jodi Pura
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali