Roman script
Singers : P. S. Govindhan and K. V. Janaki Music by : C. N. Pandurangan Female Part En inba jothiyae Un anbu paarvaiyaal Inba thendral Endhan vaazhvil Isaindhae veesudhae Male Part Paaril naan bhaagyasaali Female Part Vaazhvil naan bhaagyavathi Male Part Inbam thunbam Female Part Endrum ondraai Male Part Pangu kolvom Female Part Kannum kannum ondrai ondru Kalandha annaalae Kallam illaa kaadhal konden Endhan kannaalaa…kannum kannum Male Part Kaadhal ennum bodhaiyundom Kannae inbam kandom Jaadhiyennum paeyai vellum Anjaa nenjam kondom Female Part Laaliyae paadi jaaliyaai odi Naalumae aaduvom Male Part Paaludan thaenum paagumae Saerndha paanmaiyaai kooduvom Female Part Aadhaam yevaal polavae Male : Radhaa krishnan polavae Female : Naadham geedham polavae Both : Naamum ondraai vaazhuvom Female Part Rintin taan hulaa hulaa Tagudigu tagudigu tagudigu tagudigu Male Part Rintin taan hulaa hulaa Digudigu digudigu digudigu digudigudi Male Part Neela vaana meedhilae Ulaavum killai jodipol Female Part Maalaiyil ulaavuvom Solaiyil kulaavuvom Neela poigaiyil neendhum Annam pol naamum Odathin meedhae Both : Maalaiyil ulaavuvom Solaiyil kulaavuvom Female Part Aasai polavae Male : Aagum yaavumae Both : Maasillaadha naesathaalae Manam polae sugam peruvomae Male Part Raararaa rambam bam Raararaa rambam bam Female : Haa…aa…aa….aa…aa… Female Part Illaram ondru thaan Male Part Nallaram endradhor Both : Valluvan vaarthaiyae Vaazhvin geedhamaam Female Part Rintin taan hulaa hulaa Tagudigu tagudigu tagudigu tagudigu Male Part Rintin taan hulaa hulaa Digudigu digudigu digudigu digudigudi Raararaa rambam bam Raararaa rambam bam
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். கோவிந்தன் மற்றும் கே. வி. ஜானகி இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பெண் : என் இன்ப ஜோதியே உன் அன்புப் பார்வையால் இன்பத் தென்றல் எந்தன் வாழ்வில் இசைந்தே வீசுதே ஆண் : பாரில் நான் பாக்யசாலி பெண் : வாழ்வில் நான் பாக்யவதி ஆண் : இன்பம் துன்பம் பெண் : என்றும் ஒன்றாய் ஆண் : பங்கு கொள்வோம் பங்கு கொள்வோம் பெண் : கண்ணும் கண்ணும் ஒன்றையொன்று கலந்த அந்நாளே கள்ளம் இல்லா காதல் கொண்டேன் எந்தன் கண்ணாளா......கண்ணும் கண்ணும் ஆண் : காதல் என்னும் போதையுண்டோம் கண்ணே இன்பம் கண்டோம் ஜாதியென்னும் பேயை வெல்லும் அஞ்சா நெஞ்சம் கொண்டோம் பெண் : லாலியே பாடி ஜாலியாய் ஓடி நாளுமே ஆடுவோம் ஆண் : பாலுடன் தேனும் பாகுமே சேர்ந்த பான்மையாய் கூடுவோம் பெண் : ஆதாம் ஏவாள் போலவே ஆண் : இராதா கிருஷ்ணன் போலவே பெண் : நாதம் கீதம் போலவே இருவர் : நாமும் ஒன்றாய் வாழுவோம் பெண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு ஆண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி ஆண் : நீல வான மீதிலே உலாவும் கிள்ளை ஜோடிபோல் பெண் : மாலையில் உலாவுவோம் சோலையில் குலாவுவோம் நீல பொய்கையில் நீந்தும் அன்னம் போல் நாமும் ஓடத்தின் மீதே இருவர் : மாலையில் உலாவுவோம் சோலையில் குலாவுவோம் பெண் : ஆசை போலவே ஆண் : ஆகும் யாவுமே இருவர் : மாசில்லாத நேசத்தாலே மனம் போலே சுகம் பெறுவோமே ஆண் : ராரரா ரம்பம் பம் ராரரா ரம்பம் பம் பெண் : ஹா....ஆஅ....ஆ....ஆ....ஆ.... பெண் : இல்லறம் ஒன்றுதான் ஆண் : நல்லறம் என்றதோர் இருவர் : வள்ளுவன் வார்த்தையே வாழ்வின் கீதமாம் பெண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு ஆண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி ராரரா ரம்பம் பம் ராரரா ரம்பம் பம்
Song information
Singers: P. S. Govindhan and K. V. Janaki
Music by: C. N. Pandurangan
Release information: From En Thangai (1952 Film) (1952) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. S. Govindhan and K. V. Janaki
- Film / album: En Thangai (1952 Film)
- Composer: C. N. Pandurangan