Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Dharma thulaapaaram idhu dharma thulaapaaram Dharma thulaapaaram idhu dharma thulaapaaram Male Part Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal Ondrai ondru modhi kollum Needhi enna needhi idhu neetdhiyillaa needhi Male Part Dharma thulaapaaram idhu dharma thulaapaaram Male Part Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram Niyaaya devan kaigalilae neendathoru sattam Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam Thandanaikku pinpuraththil needhi devan mayakkam Needhi devan mayakkam Male Part Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum Soodhaattangal endrum poraattangal Male Part Dharma thulaapaaram idhu dharma thulaapaaram Male Part Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam Sattamendra peyarinilae thittamitta viyaapaaram Manithan sollum saatchiyellaam Ooththedukkum niyaayangal Manasaatchi enbathuthaan needhidevan aalayam Male Part Aalayaththu munnilaiyil Aandavanin sannathiyil Aththanaikkum theerpalikkum saththiyasothanai Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் ஆண் : கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும் நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் ஆண் : சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம் நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம் தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம் தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம் நீதி தேவன் மயக்கம் ஆண் : அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார் தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும் சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள் ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம் ஆண் : சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம் சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம் மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம் ஊத்தெடுக்கும் நியாயங்கள் மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம் ஆண் : ஆலயத்து முன்னிலையில் ஆண்டவனின் சன்னதியில் அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும் தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Neethi Devan Mayakkam (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Neethi Devan Mayakkam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan