Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Chorus

Aa….aa….aa….aaa…aaa…aaa…aa…aa..

Male Part

Dhevanae ennai paarungal

En paavangal thammai vaangi kollungal

Dhevanae ennai paarungal

En paavangal thammai vaangi kollungal

Aayiram nanmai theemaigal

Naangal seigindrom

Neengal ariveer mannitharulveer

Male Part

Oh my lord pardon me…

Male Part

Ungal mandhaiyil irundhu

Irandu aadugal

Vaeru vaeru paadhaiyil poi vittana

Irandum sandhitha podhu

Pesa mudiyavillaiyae…

Male Part

Thaai madiyilae mazhalaigal oomaiyo

Saei uravilum ninaivugal mounamo

Noi udalilaa manadhila dhevanae

Naan azhuvadhaa sirippadhaa kartharae… oo…

Male Part

Maangalum sondham thaedumae

Im maanidan seidha paavam ennavo

Kaavalae satta vaeliyae un paarvaiyil

Pillai paasam illaiyo

Male Part

Selvangal kuvindhadhu

Maaligai vandhadhu

Saevai purindhida saevagar aayiram

Thaedi kondaadida nanbargal vandhanar

Aayiram irundhum vasadhigal irundhum

No peace of mind

Chorus

Aaa…aaa….aaa….aaa….aaa….aaa…aaa…

Male Part

Dhevanae ennai paarungal

En paavangal thammai vaangi kollungal

Chorus

Aaa…aaa….aaa….aaa….aaa.

Aaa…aaa….aaa….aaa….aaa.

Male Part

Kael tharugiren endradhae neerandro

Naan pala murai ketkiren tharavillai

En karunaiyae thirakkumaa sannidhi

En kartharae kidaikkumaa nimmadhi… oo…

Male Part

Oh lord please answer my prayer

Male Part

Kangalil kanneer illaiyae

Indha ullamum idhai thaangavillaiyae

Kondu vaa illai kondu po

Un kovilil vandhu saevai seigindren

Male Part

{Mullai valaithoru magudam anindhadhum

Aani adithhoru siluvaiyil araindhadhum

Andru nadandhadhu aavi thudithadhu

Indru nadappadhu nenju thudikkudhu }

Chorus

Aaa…aaa….aaa….aaa….aaa.

Aaa…aaa….aaa….aaa….aaa.

Male Part

Dhevanae ennai paarungal

En paavangal thammai vaangi kollungal

En paavangal thammai vaangi kollungal

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....ஆ.....

ஆண் : தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

ஆயிரம் நன்மை தீமைகள்

நாங்கள் செய்கின்றோம்

நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்

ஆண் : ஓ மை லார்ட் பார்டன் மீ...

ஆண் : உங்கள் மந்தையில் இருந்து

இரண்டு ஆடுகள்

வேறு வேறு பாதையில் போய் விட்டன

இரண்டும் சந்தித்த போது

பேச முடியவில்லையே...

ஆண் : தாய் மடியிலே மழலைகள் ஊமையோ

சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ

நோய் உடலிலா மனதிலா தேவனே

நான் அழுவதா சிரிப்பதா கர்தரே.....ஓ...

ஆண் : மான்களும் சொந்தம் தேடுமே

இம் மானிடன் செய்த பாவம் என்னவோ

காவலே சட்ட வேலியே உன் பார்வையில்

பிள்ளை பாசம் இல்லையோ

ஆண் : செல்வங்கள் குவிந்தது

மாளிகை வந்தது

சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்

தேடிக் கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

நோ பீஸ் ஆஃப் மைண்ட்

குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....ஆ.....

ஆண் : தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....ஆ.....

ஆண் : கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ

நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை

என் கருணையே திறக்குமா சன்னிதி

என் கர்தரே கிடைக்குமா நிம்மதி......ஓ...

ஆண் : ஓ லார்ட் ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்

ஆண் : கண்களில் கண்ணீர் இல்லையே

இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே

கொண்டு வா இல்லை கொண்டு போ

உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்

ஆண் : {முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும்

ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும்

அன்று நடந்தது ஆவி துடித்தது

இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது}

குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ......ஆஅ......

ஆஅ.......ஆ......ஆஅ.....ஆ....ஆ.....

ஆண் : தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Gnana Oli (1972) · Lyricist: Kannadasan

Explore this song