Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

……………….

Female Part

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Soru kanda idam sorkkam ungalukku

Veru kavalai enna nimmathiyae

Female Part

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Saami thunaiyirukku semmariyae

Female Part

Naalu kaalumirukkunnu chinna vaalumirukkunnu

Thaava ninaikkaathae

Veli pottu irukkira thottam thuravula

Thaandi kudhikkaathae

Female Part

Naalu kaalumirukkunnu chinna vaalumirukkunnu

Thaava ninaikkaathae

Veli pottu irukkira thottam thuravula

Thaandi kudhikkaathae

Female Part

Intha ooru madhikkira chinna ponnu

Iva perai kedukkaathae

Unnai katti poda oru patti irukkira

Saethi marakkaathae….ae….saethi marakkaathae

Female Part

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Saami thunaiyirukku semmariyae

Female Part

Aaa….aa….aa…aa….aa….

Naama saerthu irukkira soththu sugamellaam

Maanam mariyaathai

Adha kaathth kidakkanum kaalam muzhuvathum

Sombi thiriyaamae

Female Part

Nalla ullam irukkuthu kallam kabadangal

Yaedhum theriyaathae

Intha vellai manasukkum pillai manasukkum

Thunbam kidaiyaathae thunbam kidayaathae

Female Part

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Saami thunaiyirukku semmariyae

Male Part

………………

Female Part

Antha gandhimagaanukku thaagam thaniyaththaan

Paalai koduththeenga

Kulirkaalam varumpothu kambali porvaikku

Tholai koduththeenga

Female Part

Unga paasam arinjava nesam arinjava

Vittu pirivaalo

Oru vannam iruppathai sontham iruppathai

Endrum marappaalo….oo…. endrum marappaalo

Female Part

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Soru kanda idam sorkkam ungalukku

Veru kavalai enna nimmathiyae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ..............................

பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு

பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு

சாமி துணையிருக்கு செம்மறியே

சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு

வேறு கவலை என்ன நிம்மதியே

பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு

சாமி துணையிருக்கு செம்மறியே

சாமி துணையிருக்கு செம்மறியே..

பெண் : நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு

தாவ நினைக்காதே

வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல

தாண்டி குதிக்காதே

பெண் : நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு

தாவ நினைக்காதே

வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல

தாண்டி குதிக்காதே

பெண் : இந்த ஊரு மதிக்கிற சின்னப் பொண்ணு இவ

பேரைக் கெடுக்காதே

உன்னைக் கட்டிப் போட ஒரு பட்டி இருக்கிற

சேதி மறக்காதே.....ஏ.......சேதி மறக்காதே

பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு

சாமி துணையிருக்கு செம்மறியே

சாமி துணையிருக்கு செம்மறியே

பெண் : ஆஅ....ஆ.....ஆ.....ஆ.......ஆ......

நாம சேர்த்து இருக்கிற சொத்து சுகமெல்லாம்

மானம் மரியாதை

அதக் காத்து கிடக்கணும் காலம் முழுவதும்

சோம்பி திரியாமே

பெண் : நல்ல உள்ளம் இருக்குது கள்ளம் கபடங்கள்

ஏதும் தெரியாதே

இந்த வெள்ளை மனசுக்கும் பிள்ளை மனசுக்கும்

துன்பம் கிடையாதே துன்பம் கிடையாதே

பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு

சாமி துணையிருக்கு செம்மறியே

சாமி துணையிருக்கு செம்மறியே

ஆண் : .........................

பெண் : அந்த காந்திமகானுக்கு தாகம் தணியத்தான்

பாலைக் கொடுத்தீங்க

குளிர் காலம் வரும்போது கம்பளி போர்வைக்கு

தோலைக் கொடுத்தீங்க

பெண் : உங்க பாசம் அறிஞ்சவ நேசம் அறிஞ்சவ

விட்டுப் பிரிவாளோ

ஒரு வண்ணம் இருப்பதை சொந்தம் இருப்பதை

என்றும் மறப்பாளோ......ஓ.....என்றும் மறப்பாளோ

பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு

சாமி துணையிருக்கு செம்மறியே

சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு

வேறு கவலை என்ன நிம்மதியே.....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Meendum Pallavi (1986) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song