Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Avalae en kaadhali

Avalae en kaadhali

Kodi neerukullae malar melae

Penn kulippadhu thamarai polae

Kodi neerukullae malar melae

Penn kulippadhu thamarai polae

Naan neeraai pirandhirundhaalum

Inneram ennenavo

Female Part

Avanae en kaadhalan

Avanae en kaadhalan

Nadai medayilae vizhi ingae

Avan naadagam paarpadhu engae

Nadai medayilae vizhi ingae

Avan naadagam paarpadhu engae

Avan neeraai pirandhirundhaalum

Inneram ennennavo

Female Part

{Thaalaattum pillai ondru

Saelaattam pennai kandu

Vaalattum ennam enna

Ilaiyo…malaro..kaniyo….} (2)

Male Part

{Paal vaasam sindhum

Chinna paapaavin ullam indru

Poovasam kondadhenna

Adhuvoo…idhuvoo… edhuvoo..} (2)

Male Part

Avalae en kaadhali

Female : Nadai medayilae vizhi ingae

Avan naadagam paarpadhu engae

Avan neeraai pirandhirundhaalum

Inneram ennennavo

Male Part

Thottaalum ottikkollum

Pattaana velli kannam

Ettaamal seivadhenna

Inamoo..kulamoo…bhayamoo…

Female Part

Paeraasai vellam vandhu

Poraadum podhum penngal

Thaai veedu thandha selvam

Achcham… naanam.. vetkam…

Female Part

Avanae en kaadhalan

Male Part

Kodi neerukullae malar melae

Penn kulippadhu thamarai polae

Naan neeraai pirandhirundhaalum

Inneram ennenavo

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அவளே என் காதலி

அவளே என் காதலி

கொடி நீருக்குள்ளே மலர் மேலே

பெண் குளிப்பது தாமரை போலே

கொடி நீருக்குள்ளே மலர் மேலே

பெண் குளிப்பது தாமரை போலே

நான் நீராய் பிறந்திருந்தாலும்

இந்நேரம் என்னென்னவோ

பெண் : அவனே என் காதலன்

அவனே என் காதலன்

நடை மேடையிலே விழி இங்கே

அவன் நாடகம் பார்ப்பது எங்கே

நடை மேடையிலே விழி இங்கே

அவன் நாடகம் பார்ப்பது எங்கே

அவன் நீராய் பிறந்திருந்தாலும்

இந்நேரம் என்னென்னவோ

பெண் : {தாலாட்டும் பிள்ளை ஒன்று

சேலாட்டம் பெண்ணைக் கண்டு

வாலாட்டும் எண்ணம் என்ன

இலையோ....மலரோ....கனியோ....} (2)

ஆண் : {பால் வாசம் சிந்தும் சின்ன

பாப்பாவின் உள்ளம் இன்று

பூவாசம் கொண்டதென்ன

அதுவோ.....இதுவோ.....எதுவோ.....} (2)

ஆண் : அவளே என் காதலி

பெண் : நடை மேடையிலே விழி இங்கே

அவன் நாடகம் பார்ப்பது எங்கே

அவன் நீராய் பிறந்திருந்தாலும்

இந்நேரம் என்னென்னவோ

ஆண் : தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும்

பட்டான வெள்ளிக் கன்னம்

எட்டாமல் செய்வதென்ன

இனமோ......குலமோ.....பயமோ.....

பெண் : பேராசை வெள்ளம் வந்து

போராடும் போதும் பெண்கள்

தாய்வீடு தந்த செல்வம்

அச்சம்......நாணம்.....வெட்கம்........

பெண் : அவனே என் காதலன்

ஆண் : கொடி நீருக்குள்ளே மலர் மேலே

பெண் குளிப்பது தாமரை போலே

நான் நீராய் பிறந்திருந்தாலும்

இந்நேரம் என்னென்னவோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Perum Pugazhum (1976) · Lyricist: Kannadasan

Explore this song