Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Annan kattiya vazhi amma Idhu anbaal vilaintha pazhiyamma Kannai imayae keduthathamma En kaiyae ennai adithathamma Male Part Annan kattiya vazhi amma Male Part Thottaal chuduvathu neruppagum Thodaamal chuduvathu sirippagum Thottaal chuduvathu neruppagum Thodaamal chuduvathu sirippagum Male Part Therinthae keduppathu pagaiyagum Theriyaamal keduppathu uravagum Male Part Annan kattiya vazhi amma Idhu anbaal vilaintha pazhiyamma Kannai imayae keduthathamma En kaiyae ennai adithathamma Male Part Annan kattiya vazhi amma Male Part Adaikkalam endrae ninathirunthen Anaithavanae nenjai yerithu vittan Kodutharulvaai endru vendi nindren Kumbitta kaigalai murithu vittan Male Part Annan kattiya vazhi amma Male Part Avanai ninaithae naan irundhen Avan thannai ninaithae vaazhndirundhaan Avanai ninaithae naan irundhen Avan thannai ninaithae vaazhndirundhaan Male Part Innum avanai marakkavillai Avan ithanai seidhum naan verukkavillai Male Part Annan kattiya vazhi amma Idhu anbaal vilaintha pazhiyamma Kannai imayae keduthathamma En kaiyae ennai adithathamma Male Part Annan kattiya vazhi amma
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே என்னை அடித்ததம்மா ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா ஆண் : தொட்டால் சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும் தொட்டால் சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும் ஆண் : தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும் ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே என்னை அடித்ததம்மா ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா ஆண் : அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான் கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன் கும்பிட்ட கைகளை முறித்து விட்டான் ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா ஆண் : அவனை நினைத்தே நான் இருந்தேன் அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் அவனை நினைத்தே நான் இருந்தேன் அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் ஆண் : இன்னும் அவனை மறக்க வில்லை அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்க வில்லை ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே என்னை அடித்ததம்மா ஆண் : அண்ணன் காட்டிய வழி அம்மா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Padithal Mattum Podhuma
- Composer: Vishwanathan-Ramamoorthy