Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sampath Selvam Male Part Anbae idhu kadhal uyil Anbae idhu kadhal uyil Unnai naan paarththiraavittaal En kavithai note-tu Vellaiyaaga irunthirukkum Unnai naan theendiyiraavittaal Ulagil migavum miruthuvaanavai Thalirgalae endru thappaaga solliruppaen Male Part Nee ezhuthiyiraavittaal Nee ezhuthiraavittaal Tamil ezhuththin thalaiyaezhuththu Thappithamaayirukkum Kadhaikka sugamaanathum Thabaalkaaranai naesikkum Yaezhai ezhuththaalanai pol Un kavithaigalukku naan kaaththirukkaen Female Part Ha haa…..aaa…..aa…. ……………………….. Male Part Oru megaththai pol Female : Mmmmm…. Male : Sudhanthiramaai irunthaenae ennai Oru mazhaiththuli pol Male : Aa….aaa…. Male : Kaithu seithu vittaai Female : Mmhahahahaa Male Part Pengalai thurantha intha puththan Unnai paarththathum Bothi maraththai thuranthu vittaanae Thuranthu vittaanae Male Part Nee ezhuthiyiraavittaal Nee ezhuthiraavittaal Tamil ezhuththin thalaiyaezhuththu Thappithamaayirukkum Male Part Nee oru kunguma kulam Adhil naan kulikalaamaa Nee pirakkum pothae pirunthaavanam Athil poo parikkalaamaa Male Part Antha natchaththira poovai pariththu Unakku suda suda soodavaa Antha natchaththira poovai pariththu Unakku suda suda soodavaa Male Part Inimael un azhagu peyarai yaaraavathu Female : Mmmmm Male : Azhuththu uchchariththaalum azhuthu viduvaen Ini unnai marakka mudiyaathu Female : Laalaala Male : Vaanaththil irunthu Neelaththai pirikka mudiyaaththu Female Part ……………… Male Part Nee ezhuthiyiraavittaal Nee ezhuthiraavittaal Tamil ezhuththin thalaiyaezhuththu Thappithamaayirukkum Both : ………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : அன்பே இது காதல் உயில் அன்பே இது காதல் உயில் உன்னை நான் பார்த்திராவிட்டால் என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும் உன்னை நான் தீண்டியிராவிட்டால் உலகில் மிகவும் மிருதுவானவை தளிர்களே என்று தப்பாக சொல்லியிருப்பேன் ஆண் : நீ எழுதியிராவிட்டால் நீ எழுதியிராவிட்டால் தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும் கதைக்க சுகமானதும் தபால்காரனை நேசிக்கும் ஏழை எழுத்தாளனைப் போல் உன் கவிதைகளுக்கு நான் காத்திருக்கேன்..... பெண் : ஹ ஹா......ஆஆ.....ஆ....... ...................... ஆண் : ஒரு மேகத்தைப் போல்.... பெண் : ம்ம்ம்ம்ம்.. ஆண் : சுதந்திரமாய் இருந்தேனே என்னை ஒரு மழைத் துளியைப் போல்.. பெண் : ஆ.....ஆஆ ஆண் : கைது செய்து விட்டாய்..... பெண் : ம்மஹஹ்ஹஹா ஆண் : பெண்களை துறந்த இந்த புத்தன் உன்னை பார்த்ததும் போதி மரத்தை துறந்து விட்டானே துறந்து விட்டானே ஆண் : நீ எழுதியிராவிட்டால் நீ எழுதியிராவிட்டால் தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும் ஆண் : நீ ஒரு குங்குமக் குளம் அதில் நான் குளிக்கலாமா நீ பிறக்கும் போதே பிருந்தாவனம் அதில் பூப்பறிக்கலாமா ஆண் : அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா ஆண் : இனிமேல் உன் அழகு பெயரை யாராவது..... பெண் : ம்ம்ம்ம்ம் ஆண் : அழுத்தி உச்சரித்தாலும் அழுது விடுவேன் இனி உன்னை மறக்க முடியாது.. பெண் : லாலால ஆண் : வானத்தில் இருந்து நீலத்தை பிரிக்க முடியாது பெண் : ................... இருவர் : ....................... ஆண் : நீ எழுதியிராவிட்டால் நீ எழுதியிராவிட்டால் தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும் இருவர் : லாலாலா லாலலால லாலா லாலாலா லாலலால லாலா லாலாலா லாலலால லாலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Sampath Selvam
Release information: From Thulasi (1987 Film) (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thulasi (1987 Film)
- Composer: Sampath Selvam