Roman script
Singer : P. Susheela Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Female Part Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae Female Part Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae Female Part Katti oru mutthamittu Karpanaiyil kavi padithu Katti oru mutthamittu Karpanaiyil kavi padithu Thottanaithu kaadhalukku kadal alaiyae En tholirendum vaadudhadi kadal alaiyae… Female Part Kaiyile valayal illai Kannirenddil thookamillai Kattiulla aadaigalum kadal alaiyae En sittridaiyil thangavillai kadal laiyae Female Part Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae Female Part Porsilaiyin nenjinilae Poothirukkum malaraiyellaam Porsilaiyin nenjinilae Poothirukkum malaraiyellaam Karsilaikku saathuvaenoh kadal alaiyae En kanniraindha kaadhalanthaan varavillayae Female Part Meenaaga pirandhirundhaal Vaendiyae thavamiruppaen Naanaaga poaiyiruppaen kadal alaiyae Naan maanaaga pirandhu vittaen kadal alaiyae Female Part Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே.. பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே.. பெண் : கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து தொட்டணைத்துக் காதலுக்கு கடல் அலையே என் தோளிரண்டும் வாடுதடி கடல் அலையே..... பெண் : கையிலே வளையலில்லை கண்ணிரண்டில் தூக்கமில்லை கட்டியுள்ள ஆடைகளும் கடல் அலையே. என் சிற்றிடையில் தங்கவில்லை கடல் அலையே.. பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே.. பெண் : பொற்சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் பொற்சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் கற்சிலைக்குச் சாத்துவேனோ கடல் அலையே என் கண்ணிறைந்த காதலன்தான் வரவில்லையே பெண் : மீனாகப் பிறந்திருந்தால் வேண்டியே தவமிருப்பேன் நானாகப் போயிருப்பேன் கடல் அலையே நான் மானாகப் பிறந்து விட்டேன் கடல் அலையே.... பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..
Song information
Singer: P. Susheela
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Porsilai (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Porsilai
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan