Roman script
Singers : Trichy Loganathan and A. P. Komala Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Male Part Sengol nilaikkavae selvam sezhikkavae Sindhai ellaam magizhavae Mangaiyar kulankodi vandhae pirandhanal Valar needhi thazhai thongavae Chorus Magudam kaakka vandha magal vaazhi Kula magal vaazhi Male : Oli mangaatha venkudai pugal vaazhi Anbu nizhal vaazhi Chorus : Oli mangaatha venkudai pugal vaazhi Anbu nizhal vaazhi Female Part Agilam pottrum tamil aram vaazhi Alli vazhangum manikaram vaazhi Anbu niraindhidum manam vaazhi Kadhir aadi vilaindhidum nilam vaazhi Neer valam vaazhi Chorus Agilam pottrum tamil aram vaazhi Alli vazhangum manikaram vaazhi Anbu niraindhidum manam vaazhi Kadhir aadi vilaindhidum nilam vaazhi Neer valam vaazhi Female Part Aala pirandhadhu penn arasu adhu Vaazha ninaithu kondaaduvom Kaaalathukkum namma yogathukkum Nandri kalanthida kummi paadiduvom Chorus Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom Kaaalathukkum namma yogathukkum Nandri kalanthida kummi paadiduvom Female Part Aaa..aaa…. Thulli thiriyudhu ullam ellam Adhai solli thiriyudhu ennamellam Chorus : Thulli thiriyudhu ullam ellam Adhai solli thiriyudhu ennamellam Female Part Sella kumaari dharisanam kaanavae Thedi thiriyudhu kangal ellam Chorus : Sella kumaari dharisanam kaanavae Thedi thiriyudhu kangal ellam Chorus Aala pirandhadhu penn arasu adhu Vaazha ninaithu kondaaduvom Kaaalathukkum namma yogathukkum Nandri kalanthida kummi paadiduvom Female Part Kathum kadal kodutha muthu saranthodutha Sithira thottililae malar pola Ezhil sindhugindraal ival vizhiyaale Chorus : Haa..aaaa..aaa… Female Part Kathum kadal kodutha muthu saranthodutha Sithira thottililae malar pola Ezhil sindhugindraal ival vizhiyaale Ithanai naal poruthu pathiniyeendredutha Muthirai thangam ini murai polae Nalam pettrida valarvaal piraipolae Chorus : Haa..aaaa..aaa…
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : செங்கோல் நிலைக்கவே செல்வம் செழிக்கவே சிந்தையெல்லாம் மகிழவே மங்கையர் குலக்கொடி வந்தே பிறந்தனள் வளர்நீதி தழைத் தோங்கவே குழு : மகுடம் காக்க வந்த மகள் வாழி குல மகள் வாழி ஆண் : ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி அன்பு நிழல் வாழி குழு : ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி அன்பு நிழல் வாழி பெண் : அகிலம் போற்றும் தமிழறம் வாழி அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர் ஆடி விளைந்திடும் நிலம் வாழி நீர் வளம் வாழி! குழு : அகிலம் போற்றும் தமிழறம் வாழி அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர் ஆடி விளைந்திடும் நிலம் வாழி நீர் வளம் வாழி! பெண் : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது வாழ நினைத்துக் கொண்டாடுவோம் காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம் குழு : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது வாழ நினைத்துக் கொண்டாடுவோம் காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம் பெண் : ஆ....ஆஅ.. துள்ளித் திரியுது உள்ளமெல்லாம் அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம் குழு : துள்ளித் திரியுது உள்ளமெல்லாம் அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம் பெண் : செல்லக் குமாரி தெரிசனம் காணவே தேடித் திரியுது கண்களெல்லாம் குழு : செல்லக் குமாரி தெரிசனம் காணவே தேடித் திரியுது கண்களெல்லாம் குழு : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது வாழ நினைத்துக் கொண்டாடுவோம் காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம் பெண் : கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில் சிந்துகின்றாளிவள் விழியாலே! குழு : ஹா..ஆஆ..ஆஅ... பெண் : கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில் சிந்துகின்றாளிவள் விழியாலே! இத்தனை நாள் பொறுத்து பத்தினியீன்றெடுத்த முத்திரைத் தங்கம் இனி முறைபோலே நலம் பெற்றிட வளர்வாள் பிறைபோலே குழு : ஹா..ஆஆ..ஆஅ...
Song information
Singers: Trichy Loganathan and A. P. Komala
Music by: Vishwanathan – Ramamurthy
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: Trichy Loganathan and A. P. Komala · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: Trichy Loganathan and A. P. Komala
- Film / album: Rathinapuri Ilavarasi
- Composer: Vishwanathan – Ramamurthy
- Lyricist: Pattukottai Kalyanasundaram