Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Hmm hmm hmm hmm…hmm.. Ahahaha ….. Female Part Aiyirandu thingalile Kaiyirandil vanthavane Aiyirandu thingalile Kaiyirandil vanthavane Female Part Maiyezhudhum kangalile Muthamizhai thanthavaney Female Part Arupadayil kudiyamarndha Azhagu baalagano Saravanano gurubarano Valli velavano Female Part Aiyirandu thingalile Kaiyirandil vanthavaney Maiyezhudhum kangalile Muthamizhai thanthavaney Female Part Aadidu kanmaniye Aanip pon thotilile Annam naan ootidavo Maanikka vatilile Female Part Aadidu kanmaniye Aanip pon thotilile Annam naan ootidavo Maanikka vattilile Female Part Iyatramizhum isaithamizhum Mazhalayiley kondaada Amma amma amma endru Female Part Iyatramizhum isaithamizhum Mazhalayiley kondaada Nee asainthu Nadakkaiyiley Naadagamum Undaaga Uyir kaaviyam nee endraaga Female : Aiyirandu thingalile Kaiyirandil vanthavaney Maiyezhudhum kangalile Muthamizhai thanthavaney Female Part Yaarathu thanthai endru Oooraar unaik kaettaal Thaayoru kannagi thaan Thangamey nee uraippaai Female Part Yaarathu thanthai endru Oooraar unaik kaettaal Thaayoru kannagi thaan Thangamey nee uraippaai Female Part Oruvanukkey maalaiyitaen Uravu kolla methaiyittaen Oruvanukkey maalaiyitaen Uravu kolla methaiyittaen Female Part Manamarintha unmai ithu Manivilakkaey sollivittaen Antha theivathin mel Aaniyittaen………… Female Part Aiyirandu thingalile Kaiyirandil vanthavaney Maiyezhudhum kangalile Muthamizhai thanthavaney
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஆஹாஹாஹா..... பெண் : ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே பெண் : மை வழியும் கண்களிலே முத்தமிழைத் தந்தவனே பெண் : அறுப்படையில் குடி அமர்ந்த அழகு பாலகனோ சரவணனோ குருபரனோ வள்ளி வேலவனோ பெண் : ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே மை வழியும் கண்களிலே முத்தமிழைத் தந்தவனே பெண் : ஆடிடு கண்மணியே ஆணிப் பொன் தொட்டிலிலே அன்னம் நான் ஊட்டிடவோ மாணிக்க வட்டிலிலே பெண் : ஆடிடு கண்மணியே ஆணிப் பொன் தொட்டிலிலே அன்னம் நான் ஊட்டிடவோ மாணிக்க வட்டிலிலே பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும் மழலையிலே கொண்டாட அம்மா அம்மா அம்மா என்ற பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும் மழலையிலே கொண்டாட நீ அசைந்து நடக்கையிலே நாடகமும் உண்டாக உயிர் காவியம் நீ என்றாக....... பெண் : ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே மை வழியும் கண்களிலே முத்தமிழைத் தந்தவனே பெண் : யாரது தந்தை என்று ஊரார் உனைக் கேட்டால் தாயொரு கண்ணகிதான் தங்கமே நீ உரைப்பாய் பெண் : யாரது தந்தை என்று ஊரார் உனைக் கேட்டால் தாயொரு கண்ணகிதான் தங்கமே நீ உரைப்பாய் பெண் : ஒருவனுக்கே மாலையிட்டேன் உறவுக் கொள்ள மெத்தையிட்டேன் ஒருவனுக்கே மாலையிட்டேன் உறவுக் கொள்ள மெத்தையிட்டேன் பெண் : மனமறிந்த உண்மை இது மணிவிளக்கே சொல்லிவிட்டேன் அந்த தெய்வத்தின் மேல் ஆணையிட்டேன்.......... பெண் : ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே மை வழியும் கண்களிலே முத்தமிழைத் தந்தவனே
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Annapoorni (1978) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annapoorni
- Composer: V. Kumar
- Lyricist: Vaali