Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Iniyavan Lyrics by : Vairamuthu Female Part Aarirraaroo aariraaroo Hmm mm hmm mm Male Part Aayiram thaan kavi sonnen Azhagazhaga poi sonnen Pethavalae un perumai Oththavari sollalaiyae Male Part Kaathellaam magan paattu Kaagithathil avan eluthu Oorellaam magan pechu Un keerthi ezhuthalaiyae Male Part Eluthavoo padikavo Yelaadha thaai bakthi Eluthi enna labaminnu Ezhudhaama ponenoo Male Part Aayiram thaan kavi sonnen Azhagazhaga poi sonnen Pethavalae un perumai Oththavari sollalaiyae Male Part Kadhakadhannu kalikindi Kalikkullae kuzhi vetti Karuppetti nallenna Kalandhu tharuvaayae Male Part Thondaiyilae adhu irangum Sugamaana ilanjoodu Mandaiyila innum Masamsannu nikkuthamma Male Part Varumaiyila naama patta Valithanga maattaama Penava naan eduthen Prabanjam picherinjen Male Part Kalyanam naan senju Kadhiyathu nikkayila Petha appan chennai vandhu Soth ezhuthi pona pinnae Male Part Anjaaru varusham Un aasai mugam pakkaama Pillai manam pithaachae Petha manam kall aachae Male Part Paasam ulla velaiyilae Kaasu panam koodalaiyaae Kaasu vandha velaiyilae Paasam vandhu seralaiyae Male Part Vaigaiyila oor muluga Vallarum serndhezhuga Kaipidiyaa kootivandhu Karaiserthu vittavalae Male Part Amaaaaa Enakkonnu aanadhunnaa Unakku vera pillai undu Unakkaedhum aanadhunna Enakku veru thaaiyirukka Enakku veru thaaiyirukka Enakku veru thaaiyirukka.. Female Part Aariraaroo Ariraraaroo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளர் : இனியவன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய்சொன்னேன் பெத்தவளே உன்பெருமை ஒத்தவரி சொல்லலையே ஆண் : காத்தெல்லாம் மகன் பாட்டு காகிதத்தில் அவனெழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு உன்கீர்த்தி எழுதலையே ஆண் : எழுதவோ படிக்கவோ ஏலாத தாய் பத்தி எழுதி என்ன லாபமின்னு எழுதாமப் போனேனோ ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய்சொன்னேன் பெத்தவளே உன்பெருமை ஒத்தவரி சொல்லலையே ஆண் : கதகதன்னு களிகிண்டிக் களிக்குள்ளே குழிவெட்டி கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே ஆண் : தொண்டையில அது இறங்கும் சுகமான இளஞ்சூடு மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா ஆண் : வறுமையில நாமபட்ட வலிதாங்க மாட்டாம பேனாவ நான்எடுத்தேன் பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ஆண் : கல்யாணம் நான் செஞ்சு கதியத்து நிக்கையிலே பெத்த அப்பன் சென்னை வந்து சொத்தெழுதிப் போனபின்னே ஆண் : அஞ்சாறு வருஷம் உன் ஆசை முகம் பாக்காம பிள்ளை மனம் பித்தாச்சே பெத்த மனம் கல்லாச்சே ஆண் : பாசம் உள்ள வேளையிலே காசு பணம் கூடலையே காசு வந்த வேளையிலே பாசம் வந்து சேரலையே ஆண் : வைகையில ஊர்முழுக வல்லூறும் சேர்ந்தழுக கைப்பிடியாக் கூட்டிவந்து கரைசேர்த்து விட்டவளே ஆண் : அம்மா ... எனக்கொண்ணு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளை உண்டு உனக்கேதும் ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா? எனக்கு வேற தாயிருக்கா? எனக்கு வேற தாயிருக்கா? பெண் : ஆரிராரோ ஆரிராரோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Iniyavan
Lyrics by: Vairamuthu
Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Iniyavan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naatpadu Theral 2
- Composer: Iniyavan
- Lyricist: Vairamuthu