Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Aasaikku pillai endru Aandavanai kettadhundu Pillai vandha nerathilae thalaeloo Unnai petra manam vaadudhada thalaelo Female Part Nee pirandha neram enbaar Indha nilai vandhadhenbaar Naan pirandha neramada thalaeloo Adhil veen pazhiyai nee sumandhaai thaleloo Female Part Naalai poluthu varum Nallavarukku vaazhvu varum Ezhai azhudha kanneer thalaeloo Andha eesanukku puriyumada thalaeloo Female Part Muthu thamil paadu sittu nadai podu Thathi thathi vilaiyaadu Nadai vandi thalli thalli nadamaadu Female Part Thandhaiyidam naesama Annaiyidam aasaiyaa Evaridam paasam endraal Kaigal iru pakkam kattumada Female Part Muthu thamil paadu sittu nadai podu Thathi thathi vilaiyaadu Nadai vandi thalli thalli nadamaadu Female Part Pattam melae pogudhu paaru Paravai polae parakkudhu paaru Vattamittu aadudhu paaru aadudhu paaru Melae vaalai neetti parakkudhupaaru parakkudhu paaru Female Part Noolai iluthaal melae pogum Vaalai aruthaal karanam podum Kaatru adithaal nimirndhu nirkkum Kayiru arundhaal kuninji pakkum Female Part Vattamittu aadudhu paaru aadudhu paaru Melae vaalai neetti parakkudhu paaru parakkudhu paaru
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆசைக்கு பிள்ளையென்று ஆண்டவனைக் கேட்டதுண்டு பிள்ளை வந்த நேரத்திலே தாலேலோ உன்னை பெற்ற மனம் வாடுதடா தாலேலோ பெண் : நீ பிறந்த நேரமென்பார் இந்த நிலை வந்ததென்பார் நான் பிறந்த நேரமடா தாலேலோ அதில் வீண் பழியை நீ சுமந்தாய் தாலேலோ பெண் : நாளை பொழுது வரும் நல்லவர்க்கு வாழ்வு வரும் ஏழை அழுதக் கண்ணீர் தாலேலோ அந்த ஈசனுக்கு புரியுமடா தாலேலோ பெண் : முத்துத் தமிழ் பாடு சிட்டு நடைப் போடு தத்தி தத்தி விளையாடு நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு பெண் : தந்தையிடம் நேசமா அன்னையிடம் ஆசையா எவரிடம் பாசமென்றால் கைகள் இரு பக்கம் காட்டுமடா பெண் : முத்துத் தமிழ் பாடு சிட்டு நடைப் போடு தத்தி தத்தி விளையாடு நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு பெண் : பட்டம் மேலே போகுது பாரு பறவைப் போலே பறக்குது பாரு வட்டமிட்டு ஆடுது பாரு ஆடுது பாரு ஆடுது பாரு மேலே வாலை நீட்டி பறக்குது பாரு பறக்குது பாரு பெண் : நூலை இழுத்தால் மேலே போகும் வாலை அறுத்தால் கரணம் போடும் காற்று அடித்தால் நிமிர்ந்து நிற்கும் கயிறு அறுந்தால் குனிஞ்சி போகும் பெண் : வட்டமிட்டு ஆடுது பாரு ஆடுது பாரு ஆடுது பாரு மேலே வாலை நீட்டி பறக்குது பாரு பறக்குது பாரு
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Vilaiyattu Pillai (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vilaiyattu Pillai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan