Roman script
Singer : Radha Jayalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female Part Aaa…..aaa…..aaa….aa…a…. Aa….a…aa….aa….aa… Aaa…..aaa…..aaa….aa…a…. Female Part Aadinaal…. Aadinaal nadanam aadinaal Amutha tamil mozhiyil azhagura isaipaadi Aadinaal nadanam aadinaal Amutha tamil mozhiyil azhagura isaipaadi Aadinaal nadanam aadinaal Female Part Naadi naan alaintha Narkalai porulellam Naadi naan alaintha Narkalai porulellam Nalina valaivu kollum Nayavurum vizhigalil viyanthidum inimai thara Aadinaal nadanam aadinaal….. Female Part Thaala thattugal kootti Sathangai oli kulunga Thaala thattugal kootti Sathangai oli kulunga Thaiyal oruvanidam maiyal kondaval endru Thaiyal oruvanidam maiyal kondaval endru Female Part Neela udal asaiththu niththirai illaathu Neela udal asaiththu niththirai illaathu Niththam niththam ninaiththu siththam urugi Vizhi saernthida manam yaengida Aadinaal Female Part Kalai madakki thiran kaigalil viral neetti Kalai madakki thiran kaigalil viral neetti Kalai migu varumvarai karpanai nayam kaatti Kalai migu varumvarai karpanai nayam kaatti Velai pidikkum ezhil veera uruvam theetti Velai pidikkum ezhil veera uruvam theetti Female Part Vinthai udal asaivil Sooranai veezhththiya veeramellam kaanave Aadinaal nadanam aadinaal….. Female Part Thaamarai malar kaatta than karam kuvitthae Thaamarai malar kaatta than karam kuvitthae Thaavidum vandu athil maevum thaen suvaiththathu Thaavidum vandu athil maevum thaen suvaiththathu Female Part Kaamanai eriththa thanal pozhiyum uruvam Kaamanai eriththa thanal pozhiyum uruvam Kayilai pathiyil nadanam vilanga Pirai soodidum perumaal enavae aadinaal Female Part Aadinaal nadanam aadinaal Amutha tamil mozhiyil azhagura isaipaadi Aadinaal nadanam aadinaal
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஅ.......ஆ......ஆஅ.....அ.....ஆ.... அ.......ஆ......ஆஅ.....அ.....ஆ.... ஆஅ.......ஆ......ஆஅ.....அ.....ஆ.... பெண் : ஆடினாள்....... ஆடினாள் நடனம் ஆடினாள் அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி ஆடினாள் நடனம் ஆடினாள்..... அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி ஆடினாள் நடனம் ஆடினாள்..... பெண் : நாடி நான் அலைந்த நற்கலை பொருளெல்லாம் நாடி நான் அலைந்த நற்கலை பொருளெல்லாம் நளின வளைவு கொள்ளும் நயவுறும் விழிகளில் வியந்திடும் இனிமை தர ஆடினாள் நடனம் ஆடினாள்..... பெண் : தாளத் தட்டுகள் கூட்டி சதங்கை ஒலி குலுங்க தாளத் தட்டுகள் கூட்டி சதங்கை ஒலி குலுங்க தையல் ஒருவனிடம் மையல் கொண்டவள் என்று தையல் ஒருவனிடம் மையல் கொண்டவள் என்று பெண் : நீள உடல் அசைத்து நித்திரை இல்லாது நீள உடல் அசைத்து நித்திரை இல்லாது நித்தம் நித்தம் நினைந்து சித்தம் உருகி விழி சோர்ந்திட மனம் ஏங்கிட ஆடினாள் பெண் : காலை மடக்கி திறன் கைகளில் விரல் நீட்டி காலை மடக்கி திறன் கைகளில் விரல் நீட்டி கலை மிகு வரும்வரை கற்பனை நயம் காட்டி கலை மிகு வரும்வரை கற்பனை நயம் காட்டி வேலைப் பிடிக்கும் எழில் வீர உருவம் தீட்டி வேலைப் பிடிக்கும் எழில் வீர உருவம் தீட்டி பெண் : விந்தை உடல் அசைவில் சூரனை வீழ்த்திய வீரமெல்லாம் காணவே ஆடினாள் நடனம் ஆடினாள் பெண் : தாமரை மலர் காட்ட தன் கரம் குவித்தே தாமரை மலர் காட்ட தன் கரம் குவித்தே தாவிடும் வண்டு அதில் மேவும் தேன் சுவைத்தது தாவிடும் வண்டு அதில் மேவும் தேன் சுவைத்தது பெண் : காமனை எரித்த தணல் பொழியும் உருவம் காமனை எரித்த தணல் பொழியும் உருவம் கயிலை பதியில் நடனம் விளங்க பிறை சூடிடும் பெருமாள் எனவே ஆடினாள் பெண் : ஆடினாள் நடனம் ஆடினாள்.... அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி ஆடினாள் நடனம் ஆடினாள்.....
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Maragatham (1959) · Lyricist: Ra. Balu
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Maragatham
- Composer: S. M. Subbaiah Naidu