Roman script

Singers : S. Janaki and T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Female Part

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren

Female Part

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Male Part

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Naadhan kettaal tharuvaayoo

Naanum kettaal tharuvaayoo

Vaedhan solvaan vaedhangal

Vilakkam solven naan amma

Maadhar kulathin poongombhu

Malargal konjam thara vendum

Male Part

Aadhinadhan ketkkindraan

Aralipoovai tharavendum

Kaadhal naaril thoduthaalum

Kaalam paarthu thara vendum

Female Part

Kaiyenum malarum

Kannenum malarum

Kaavalan thanakaagavae

En kaavalan thanakaagavae

Male Part

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Neiyidum kuzhalum

Thaamarai mugamum

Malarndhadhu enakkaagavae

Naan vandhadhum unakkaagavae

Female Part

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Thaazhampoovin manamaaga

Jaadhi poovin niramaaga

Male Part

Vaazha unakkoru varam vendum

Mannan naan adhai thara vendum

Female Part

Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga

Female Part

Aadhinadhan ketkkindraan

Male : Ketkindraan

Female Part

Mandhira kaluthil

Sandhana kulambhu

Kondadhu unakkaagavae

En kolamum unakkaagavae

Male Part

Anjana vilakku

Netriyil edharkku

Yaavaiyum enakkaagavae

En aasaiyum unakkagavae

Female Part

Koondhal sudum piraiyaaga

Kooda aadum maanaaga

Male : Neendhi varuvaal madhiyendru

Ninaithu vandhen naan indru

Female Part

Aiyan thiruvadi thanakkaaga

Alliya malargal unakkaaga

Female Part

Aadhinadhan ketkkindraan

Aralipoovai edukkindren

Kaadhal naaril thodukkindren

Kaalam paarthu kodukkindren

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

காதல் நாரில் தொடுக்கின்றேன்

காலம் பார்த்து கொடுக்கின்றேன்

பெண் : ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

ஆண் : நாதன் கேட்டால் தருவாயோ

நானும் கேட்டால் தருவாயோ

நாதன் கேட்டால் தருவாயோ

நானும் கேட்டால் தருவாயோ

வேதன் சொல்வான் வேதங்கள்

விளக்கம் சொல்வேன் நானம்மா

மாதர் குலத்தின் பூங்கொம்பு

மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்

ஆண் : ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப் பூவைத் தர வேண்டும்

காதல் நாரில் தொடுத்தாலும்

காலம் பார்த்துத் தர வேண்டும்

பெண் : கையெனும் மலரும்

கண்ணெனும் மலரும்

காவலன் தனக்காகவே என்

காவலன் தனக்காகவே

ஆண் : நெய்யிடும் குழலும்

தாமரை முகமும்

நெய்யிடும் குழலும்

தாமரை முகமும்

மலர்ந்தது எனக்காகவே நான்

வந்ததும் உனக்காகவே

பெண் : தாழம்பூவின் மணமாக

ஜாதிப் பூவின் நிறமாக

தாழம்பூவின் மணமாக

ஜாதிப் பூவின் நிறமாக

ஆண் : வாழ உனக்கொரு வரம் வேண்டும்

மன்னன் நானதைத் தர வேண்டும்

பெண் : ஐயன் திருவடி தனக்காக

அள்ளிய மலர்கள் உனக்காக

பெண் : ஆதி நாதன் கேட்கின்றான்

ஆண் : கேட்கின்றான்

பெண் : மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு

கொண்டது உனக்காகவே

என் கோலமும் உனக்காகவே

ஆண் : அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு

யாவையும் எனக்காகவே

என் ஆசையும் உனக்காகவே

பெண் : கூந்தல் சூடும் பிறையாக

கூட ஆடும் மானாக

ஆண் : நீந்தி வருவாள் மதியென்று

நினைத்து வந்தேன் நானின்று

பெண் : ஐயன் திருவடி தனக்காக

அள்ளிய மலர்கள் உனக்காக

பெண் : ஆதிநாதன் கேட்கின்றான்

அரளிப்பூவை எடுக்கின்றேன்

காதல் நாரில் தொடுக்கின்றேன்

காலம் பார்த்து கொடுக்கின்றேன்

Song information

Singers: S. Janaki and T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Ganga Gowri (1973) · Singer: S. Janaki and T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song