தமிழ்
பெண் : விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான் விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற ஆண் : விளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும் பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும் பசி ஏக்கம் தானாத் தீரும் ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது பெண் : நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது ஆண் : பொழுதாச்சு விளையாட ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும் பெண் : விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான் தந்தன தந்தனனா தந்தன தந்தனனா தந்தன் தந்தன் தந்தன் தந்தன் தந்தன்னா தந்தன் தந்தன் தந்தன் தந்தன் தந்தன்னா தந்தன தந்தன தானானா தந்தன் தந்தன் தானானா தந்தன தந்தன தானானா தந்தன் தந்தன் தானானா தந்தன தந்தனனா தந்தன தந்தனனா ஆண் : நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு பெண் : நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு ஆண் : நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது பெண் : ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது ஆண் : பொழுதாச்சு விளையாட ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும் ஆண் : விளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற பெண் : விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான் மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
Song information
படம்: முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: நா. காமராசன்
Album: முந்தானை முடிச்சு
Explore this song
- Singer: இளையராஜா
- Singer: எஸ்.ஜானகி
- Film / album: முந்தானை முடிச்சு
- Composer: இளையராஜா
- Actor: பாக்யராஜ்
- Actor: ஊர்வசி
- Actor: பூர்ணிமா ஜெயராம்
- Actor: தீபா
- Actor: கே.கே. சௌந்தர்
- Actor: நளினிகாந்த்
- Actor: பீலி சிவம்
- Actor: கோவை சரளா
- Actor: பயில்வான் ரங்கநாதன்