தமிழ்

வான் மேகங்களே

வாழ்த்துங்கள் பாடுங்கள்

நான் இன்று கண்டு கொண்டேன்

ராமன

வான் மேகங்களே

வான் மேகங்களே

வாழ்த்துங்கள் பாடுங்கள்

நான் இன்றுக் கண்டு கொண்டேன்

சீதையை

வான் மேகங்களே

பாலிலே பழம் விழுந்து

தேனிலே நனைந்ததம்மா

பாலிலே பழம் விழுந்து

தேனிலே நனைந்ததம்மா

பூவிலே மாலைக் கட்டி

சூடுவேன் கண்ணா

கூ குக்குகூ

குயில் பாடி வாழ்த்தும்

நேரம் கண்டேன்

வான் மேகங்களே

வாழ்த்துங்கள் பாடுங்கள்

தென்றலே ஆசைக் கொண்டு

தோகையை கலைந்ததம்மா

தென்றலே ஆசைக் கொண்டு

தோகையை கலைந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட

பூவை நீ கண்ணே

மா அம்மம்மா

நெஞ்சில் தீபம் ஏற்றும்

தேகம் கண்டேன்

வான் மேகங்களே

வாழ்த்துங்கள் பாடுங்கள்

பள்ளியில் பாடம் சொல்லி

கேட்க நான் ஆசைக் கொண்டேன்

பாவையின் கோவில் மணி

ஓசை நீ கண்ணே

தா தந்தன்னா

சங்கின் ஓசை கேட்கும்

நேரம் என்றோ?

வான் மேகங்களே

வாழ்த்துங்கள் பாடுங்கள்

நான் இன்றுக் கண்டு கொண்டேன்

ராமனை

வான் மேகங்களே

Song information

படம்: புதிய வார்ப்புகள் (1979)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: கண்ணதாசன்

Album: புதிய வார்ப்புகள்

Explore this song