தமிழ்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ யார் பாடலை யார் பாட தோணும் தாய் பாடலை நான் பாட வேணும் உன் பாசமோ கருணை பாய்மரம் உன் பாதமே கடவுள் கோபுரம் யார் பாடலை யார் பாடத் தோணும் அம்மாவின் மூச்சில் வாழாத பிள்ளை அகிலத்தில் யாரும் இல்லை சேயாக பாதி தாயாக பாதி நீயாக நீயே இல்லை காச சேத்து முந்தானைக்குள் வைத்து முடி போட்டு வாழாதவள் கையில் உள்ள கை ரேகை கேட்டாலும் கொடுக்கின்ற ஆளானவள் சாலையோரம் வாழும் யார்க்கும் சோறு ஊட்டும் தாயானவள் கண்ணை மூடி தெய்வம் பார்க்கும் கற்பூர தீயானவள் கடமை மறந்து போகின்ற செல்வங்களே தனியாய் தவிக்கும் உன் தாயின் உள்ளங்களே ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு யார் பாடலை யார் பாட தோணும் தாய் பாடலை தாலாட்டும் வானம் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பூமி பந்து எனை விட்டு உருண்டோடி எங்கேயோ போனதென்ன நேற்று தந்த தாய் பாலையெல்லாம் கண்ணீராய் ஆனதென்ன காற்று தெய்வம் ரெண்டும் ரெண்டு கண்ணுக்கு அறியாதது தாயின் துன்பம் என்றும் என்றும் யாருக்கு தெரியாதது உறவு இருந்தும் எனக்கேதும் நாதி இல்லை திசைகள் இருந்தும் நான் போக பாதை இல்லை ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ கண்ணே நீ கண்ணுறங்கு ஆஆஆ ஆஆஆ கண்ணே நீ கண்ணுறங்கு யார் பாடலை யார் பாட தோணும் என் பாடலை நீ பாட வேணும் தாய் ஆனது அதுதான் பாவமா நான் வாழ்வது இனியும் நியாயமா ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு
Song information
படம்: J.பேபி (2024)
பாடியவர்: கே.எஸ். சித்ரா
இசை: டோனி பிரிட்டோ
பாடலாசிரியர்: கபிலன்
Album: J.பேபி
Explore this song
- Film / album: J.பேபி
- Composer: டோனி பிரிட்டோ
- Lyricist: கபிலன்
- Actor: ஊர்வசி
- Actor: அட்டகத்தி தினேஷ்
- Actor: லொள்ளு சபா மாறன்
- Actor: கவிதா பாரதி
- Actor: ஏழுமலை
- Actor: ஜெய மூர்த்தி