தமிழ்

குழு : ஹாஹாஹா ஹாஹாஹா

ஹாஹாஹா ஹாஹாஹா

ஆண் : நெடுமரம் தொலைந்ததே

நிழல் இங்கு மறைந்ததே

கூடோடு குயில் வீழந்ததே

ஆண் : பசியினை உணர்ந்தும்

மடியில் பால் சுரந்திடும்

தாய்மைக்கு ஈடேது இங்கே

ஆண் : ஊரும் தண்ணீர் கூட

ஒரு நேரம் காயும்

உன் பாசம் தீராதம்மா

ஆண் : காணும் முகம் யாவும்

உன் சாயல் போலே

கானல் காட்சி ஏனோ

ஆண் : நெடுமரம் தொலைந்ததே

நிழல் இங்கு மறைந்ததே

கூடோடு குயில் வீழந்ததே

ஆண் : பசியினை உணர்ந்தும்

மடியில் பால் சுரந்திடும்

தாய்மைக்கு ஈடேது இங்கே

பெண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆண் : பிள்ளை கூவத்தில்

கள்ளம் சேர்ந்ததா

கண்கள் தாண்டியே

கங்கை போனதா

ஆண் : உன் வாழ்த்து இல்லாமல் நான்

ஆகாயம் நான் போனாலுமே

என் தோகை வான் ஏறுமா

ஆண் : உன் கால்கள் இல்லாத ஓர்

பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே

என் வாழ்வு வாழ்வாகுமா

ஆண் : சுற்றும் பூமியே

நீ ஊட்டும் அன்பில் தானம்மா

எந்தன் வாழ்க்கையே

நீ போட்ட பிச்சை தானம்மா

ஆண் : நெஞ்சனைச்சி கெஞ்சிடனும்

எங்கிருக்க என் அம்மா

ஆண் : விழி உனை இழந்ததும்

விளக்குகள் அணைந்ததே

இருள் வந்து எனை சூழ்ந்ததே

ஆண் : பிழைகளை பொறுத்திடும்

வலிகளை துடைத்திடும்

தாயே உன் நிழல் வேண்டுமே

குழு : ஹாஹாஹா ஹாஹாஹா

ஹாஹாஹா ஹாஹாஹா

Song information

படம்: J.பேபி (2024)

பாடியவர்கள்: பிரதீப் குமார், அன்னி ஜே

இசை: டோனி பிரிட்டோ

பாடலாசிரியர்: உமாதேவி

Album: J.பேபி

Explore this song