தமிழ்

பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : கிளி கிளி கிளி

பச்ச பசுங்கிளி

வழி வழி வழி

விட்டு விலகடி

இடுப்பு மடிப்பில்

ஆள மடிக்கும்

ஹே வேதவள்ளி

ஆண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

அம்பிகே ராதிகே

தேவிகே மேனகே

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண் : பல பல பல

ரெண்டு தினம் பல

நிறம் நிறம் நிறம்

நீல கண்ணின் நிறம்

பொம்பள மனசு

சிரிச்சு பறிக்கும்

ஹே அருணாச்சலம்

பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

சின்னய்யா கண்ணையா

செல்லய்யா சொல்லையா

பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண் : அப்பாவி ஆனாலும்

அடிமேல அடிவாங்கும்

அடிச்சாலும் ஊர் கூடி

ஆஹான்னு சொல்லுது

என்னது

பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : அடி மேல அடி வாங்கி

அனைவரையும் சொக்க வைக்கும்

மேளக்காரன் கொண்டு வந்த

மிருதங்கம் தான் நீ சொன்னது

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஹய்ய
ா
மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : ஒல்லி ஒல்லி சுப்பன் தான்

ஒத்தக்காலு கருப்பன் தான்

ஒரு காலு இருந்தாலும்

ஊனறது மேடையில்தான் யாரது

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண் : ஒல்லி ஒல்லி சுப்பையா

ஒத்தக்காலு கருப்பையா

நீ சொன்ன ஜாடையெல்லாம்

ஊது பத்திதான் அது சொன்னது

பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண் : தாளமில்லா ஆட்டம் அது

தப்பான ஆட்டமது

பொம்பளைக்கு புடிக்காத

ஆட்டம் அது என்னது என்னது

பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : சுத்தி சுத்தி ஆடுறது

துட்டு கட்டி ஆடுறது

பொம்பளைக்கு புடிக்காத

சூதாட்டம் தான் அது சொன்னது

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : ஹோய் மூணு கிளி

மூணு நிறம்

மூணுக்குமே வேற குணம்

கூண்டுக்குள்ளே போட்டதுமே

அத்தனையும் சிவப்பு நிறம் என்னது

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண் : வெத்தலையும் சுண்ணாம்பும்

வெட்டிவச்சா கருப்பாகும்

ஒன்னாக சேரும்போது

சிவக்கிற தாம்புலம்தான் அது

பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பெண் & ஆண் குழு : ஏலேலே ஐய

ஏலேலேலோ மா

ஏலேலே ஐய

ஏலேலேலோ மா

பெண் : ஒருத்தனுக்கு கைக்கொடுத்தா

ஒருத்தனுக்கு கால்கொடுத்தா

ஒருத்தன தான்

மாரோட கட்டிக்கிட்டா

பொம்பள யாரது

பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : வளையலுக்கு கைக்கொடுத்தா

கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா

முந்தானை சேலையைத்தான்

மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : லே லே லே லே அம்மா

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : ஹை ஒருத்தனத்தான்கழட்டி புட்டா

ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா

ஒருத்தனத்தான் கையோட

வச்சிக்கிட்டா பொம்பள யாரது

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

ஆண் : இளங்கன்ன கழட்டிப்புட்டு

பசுமாட்ட கட்டி புட்டு

கையோட வெச்சிருந்தா

பால் சொம்புதான் அது வேறெது

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

பலம் பலம் பலம்

ரெண்டு பீமன் பலம்

நிறம் நிறம் நிறம்

நீலக்கண்ணின் நிறம்

அவனை ஜெயிக்க யாரும் இல்ல

அவன் தான்டி அருணாச்சலம்

ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

Song information

படம்: அருணாச்சலம் (1997)

இசை: தேவா

பாடலாசிரியர்: பழனி பாரதி

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா

Album: அருணாச்சலம்

Explore this song