தமிழ்

பெண் : புத்தம் புது காலை

பொன்னிற வேளை

என் வாழ்விலே

தினந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்

எந்நாளும் ஆனந்தம்

பெண் : புத்தம் புது காலை

பொன்னிற வேளை

பெண் : பூவில் தோன்றும் வாசம்

அதுதான் ராகமோ

இளம் பூவை நெஞ்சில் தோன்றும்

அதுதான் தாளமோ

பெண் : மனதின் ஆசைகள்

மலரின் கோலங்கள்

குயிலோசையின் பரிபாஷைகள்

அதிகாலையின் வரவேற்புகள்

பெண் : புத்தம் புது காலை

பொன்னிற வேளை

பெண் : ஓஓஓ ஓஓஓ

ஓஓஓ ஓஓஓ

பெண் : வானில் தோன்றும் கோலம்

அதை யார் போட்டதோ

பனி வாடை வீசும் காற்றில்

சுகம் யார் சேர்த்ததோ

பெண் : வயதில் தோன்றிடும்

நினைவில் ஆனந்தம்

வளர்ந்தோடுது இசைபாடுது

வலி கூடிடும் சுவை கூடுது

பெண் : புத்தம் புது காலை

பொன்னிற வேளை

என் வாழ்விலே

தினந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்

எந்நாளும் ஆனந்தம்

பெண் : லலலல லாலா

லாலல லாலா

Song information

படம்: அலைகள் ஓய்வதில்லை (1981)

பாடியவர்: எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: கங்கை அமரன்

Album: அலைகள் ஓய்வதில்லை

Explore this song