தமிழ்

பெண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

பெண் : பாடு நிலாவே

தேன் கவிதை

பூ மலர

பாடு நிலாவே

தேன் கவிதை

பூ மலர

உன் பாடலை

நான் தேடினேன்

கேட்காமலே

நான் வாடினேன்

பாடு நிலாவே

தேன் கவிதை

பூ மலர

பெண் : நீ போகும் பாதை

என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை

என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக

ஊர்கோலமோ

என் வீடு வாராமல்

ஏன் போகுமோ

பெண் : கைதான போதும்

கை சேர வேண்டும்

உன்னோடு வாழும்

ஓர் நாளும் போதும்

என் ஜென்மமே

ஈடேறவே

ஆண் : பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே

உன் பாடலை

நான் கேட்கிறேன்

பாமாலையை

நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே

ஆண் : ஊரெங்கும் போகும்

என் ராகங்களே

உன் வீடு தேடும்

என் மேகங்களே

பூ மீது தேன் தூவும்

காதல் வரம்

என் நெஞ்சில்

நீ ஊதும் நாதஸ்வரம்

ஆண் : காவேரி வெள்ளம்

கை சேர துள்ளும்

ராகங்கள் சேரும்

தாகங்கள் தீரும்

காதல் நிலா தூதாகுமே

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே

பெண் : உன் பாடலை

நான் கேட்கிறேன்

ஆண் : பாமாலையை

நான் கோர்க்கிறேன்

பெண் : பாடும் நிலாவே

ஆண் : தேன் கவிதை

ஆண் & பெண் : பூ மலரே

Song information

படம்: உதய கீதம் (1985)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: மு. மேத்தா

Album: உதய கீதம்

Explore this song