தமிழ்

ஆஆஆ

ஆஆஆ

ஆஆஆஆ

ஆஆஆஆ

நிலாவே வா

செல்லாதே வா

எந்நாளும் உன்

பொன்வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும்

நினைவாலே

அணைத்தேனே

நிலாவே வா

செல்லாதே வா

காவேரியா கானல் நீரா

பெண்ணே என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா

சொல்லு கொஞ்சம் நில்லு

ஆம்மாடியோ நீதான்

இன்னும் சிறு பிள்ளை

தாங்காதம்மா நெஞ்சம்

நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே

சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா

செல்லாதே வா

பூஞ்சோலையில் வாடைக் காற்றும்

வாட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும்

ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை

தந்தால் என்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை

சொன்னால் என்ன மானே

ஆகாயம் தாங்காத

மேகம் ஏது கண்ணே

நிலாவே வா

செல்லாதே வா

எந்நாளும் உன்

பொன் வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும்

நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா

செல்லாதே வா

எந்நாளும் உன்

பொன்வானம் நான்

Song information

படம்: மௌன ராகம் (1986)

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இசை: இளையராஜா

இயற்றியவர்: வாலி

Album: மௌன ராகம்

Explore this song