தமிழ்

பெண் : ஹான் நான் புடிக்கும்

மாப்பிள்ளைதான்

நாடறிஞ்ச மன்மதன்டா

ஆண் : ஆஹா அபாரம் பரிமளா

ஆண் : மேல சொல்லு

பெண் : நான் புடிக்கும்

மாப்பிள்ளைதான்

நாடறிஞ்ச மன்மதன்டா

நான் போடுற கோட்டுக்குள்ள

கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள

நான் கைக்கட்டி வாய்பொத்தி

நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு : அடடடட

பெண் : நான் புடிக்கும்

மாப்பிள்ளை தான்

நாடறிஞ்ச மன்மதன்டா

நான் போடுற கோட்டுக்குள்ள

குழு : கட்டுப்பட்டு

பெண் : வாழணும் வீட்டுக்குள்ள

நான் கைக்கட்டி வாய்பொத்தி

நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு : அடடடட

பெண் : மூஞ்சிய தூக்காம

காஞ்சிப்புரம் பட்டு வாங்கி

கொடுக்கணும் டோய்

குழு : ஆமாமாமா

வாங்கி கொடுக்கணும் டோய்

பெண் : ராத்திரி ஷோவுக்கு

டூரிங் டாக்கீஸ்

கூட்டிட்டு போகணும் டோய்

குழு : எங்களையும்

கூட்டிட்டு போகணும் டோய்

பெண் : ஹாங்

பெண் : சாமத்தில கால் வலிச்சா

நீவி விட கத்துக்கணும்

சேவல் கோழி

கூவும் முன்னே

வாசலையும் கூட்டணும் டோய்

ஆண் : ஆஹா மொத்தத்தில்

பொண்டாட்டி நீயில்ல

மாப்பிள்ளை டோய்

குழு : டும் டும் டும் டும் டும்

பெண் : நான் புடிக்கும்

மாப்பிள்ளை தான்

நாடறிஞ்ச மன்மதன்டா

நான் போடுற கோட்டுக்குள்ள

குழு : கட்டுப்பட்டு

பெண் : வாழணும் வீட்டுக்குள்ள

நான் கைக்கட்டி வாய்பொத்தி

நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு : அடடடட

பெண் : மாமான்னு கூப்பிட்டா

ஏமான்னு கேட்காம

தாப்பாள போடணும் டோய்

குழு : ஆமாமாமா

தாப்பாள போடணும் டோய்

(வசனம் ஆண்: கொஞ்சம் இரு

கொஞ்சம் இரு

தாப்பாளா அது எதுக்கு?

ஆண்: டேய், நீ சின்னப் பையன்

உனக்கு வயசு பத்தாது

சும்மா இருரா

பரிமளா நீ பாடும்மா)

பெண் : மாமான்னு கூப்பிட்டா

ஏமான்னு கேட்காம

தாப்பாள போடணும் டோய்

குழு : ஆமாமாமா

தாப்பாள போடணும் டோய்

பெண் : மானுன்னு தேனுன்னு

மல்லிகை பூ வச்சு

மாருல சாய்க்கணும் டோய்

குழு : ஆமாமாமா மாருல

சாய்க்கணும் டோய்

பெண் : ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும்

ஆரிராரோ பாடிக்கணும்

ஊர் உலகம் மெச்சும்படி

மாமி என்ன வச்சுக்கணும்

(வசனம் ஆண் : எல்லாம் சரி பரிமளா

ஆனா முக்கியமான

ஒன்ன விட்டுட்டியே

பெண்: எத)

ஆண் : ஒரு வப்பாட்டி கிப்பாட்டி

வைக்காம பாத்துக்கணும்

பெண் : ஆமாமாமா

பெண் : நான் புடிக்கும்

மாப்பிள்ளை தான்

நாடறிஞ்ச மன்மதன்டா

நான் போடுற கோட்டுக்குள்ள

குழு : கட்டுப்பட்டு

பெண் : வாழணும் வீட்டுக்குள்ள

நான் கைக்கட்டி வாய்பொத்தி

நில்லுன்னா நிக்கணும் டோய்

குழு : அடடடட

பெண் : நான் புடிக்கும்

மாப்பிள்ளை தான்

நாடறிஞ்ச மன்மதன்டா

நான் புடிக்கும்

மாப்பிள்ளை தான்

Song information

படம்: முந்தானை முடிச்சு (1983)

பாடியவர்கள்: எஸ். ஜானகி மற்றும் குழு

இசை: இளையராஜா

இயற்றியவர்: புலமைப்பித்தன்

Album: முந்தானை முடிச்சு

Explore this song