தமிழ்
பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆஆஆ பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் பெண் : வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆஆஆ பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் பெண் : கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் பெண் : கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார் பெண் : காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள்
மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற் காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் பெண் : பால் காவடி பழக் காவடி புஷ்பக் காவடி மச்சக் காவடி பன்னீர்க் காவடி சேவற் காவடி சர்ப்பக் காவடி தீர்த்தக் காவடிகள் ஆண் : கந்தவேல் முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : கதிர்வேல் முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : வேல் வேல் குழு : வெற்றி வேல் ஆண் : வேல் வேல் குழு : வெற்றி வேல் பெண் : வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை ஆண் : திருத்தணி முருகனுக்கு குழு : அரோகரா பெண் : வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி பெண் : கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே பெண் : கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு பெண் : சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே
Song information
படம்: தெய்வம் (1972)
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: ராதா ஜெயலட்சுமி
Album: தெய்வம்
Explore this song
- Film / album: தெய்வம்
- Composer: குன்னக்குடி வைத்தியநாதன்
- Lyricist: கவிஞர் கண்ணதாசன்
- Actor: கிருபானந்த வாரியார்
- Actor: ஜெமினி கணேசன்
- Actor: கே.ஆர்.விஜயா
- Actor: ஸ்ரீகாந்த்
- Actor: சௌகார் ஜானகி
- Actor: சிவக்குமார்
- Actor: மேஜர் சுந்தர்ராஜன்
- Actor: ஆர்.எஸ்.மனோகர்
- Actor: அசோகன்
- Actor: ஏ.வி.எம்.ராஜன்
- Actor: வி.கோபாலகிருஷ்ணன்
- Actor: முத்துராமன்
- Actor: நாகேஷ்
- Actor: வி.எஸ்.ராகவன்